சாமானிய மக்கள் தினசரி பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விற்பனையில் விதிக்கப்படும் வரியின் வாயிலாகவே மத்திய, மாநில அரசுகள் அதிகளவிலான வருமானத்தைப் பெறுகிறது. இதற்காகவே ஜிஎஸ்டியில் பெட்ரோல், டீசலை சேர்க்காமல் மக்களை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது.
இந்நிலையில் கடந்த 15 நாட்களாக இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
விருப்பம்போல் விலை ஏற்றம்..
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் விலை நிலையை அடிப்படையாகக் கொண்ட பிற எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் விலையை நிர்ணயம் செய்யும் பட்சத்தில். இந்தியன் ஆயில் தனது விருப்பத்தின் பேரில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது.
கச்சா எண்ணெய்
கர்நாடக தேர்தலுக்காகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தாலும், இந்தியாவில் சுமார் 15 நாட்களுக்குப் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருந்தது.
இதன் பின்பு ஒவ்வொரு நாளும் சராசரியாகத் தினமும் லிட்டருக்கு 30 பைசா வரையிவ் இதன் விலையை உயர்த்தி வந்தது மத்திய அரசு.
விலை மாற்றம்..
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 80.32 டாலரில் இருந்து 74.78 டாலர் வரையில் குறைந்துள்ளது. இந்தியா அதிகளவில் வாங்கும் கச்சா எண்ணெய்யும் இதுதான்.
ஒரு பேரலுக்குச் சுமார் 5.5 டாலர் வரையில் இதன் விலை குறைந்தாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்த வண்ணமே உள்ளது.
15 நாள்
இந்தியாவில் கடந்த 15 நாட்களாகத் தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர், இந்த விலை உயர்வினால் மக்கள் தினசரி பயன்படுத்தும் காய்கறி, உணவுப் பொருட்கள், அடிப்படைத் தேவைகள், டாக்ஸி கட்டணம் ஆகியவற்றின் விலை அதிகரித்து மக்களைப் பெரிய அளவில் பாதித்து வருகிறது.
என்ன காரணம்..?
கச்சா எண்ணெய் விலை உயர்வின்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மோடி தலைமையிலான மத்திய அரசு கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் விலையைக் குறைக்காமல் வைத்திருப்பது ஏன் என்பது இதுவரை புரியவில்லை.
தர்மேந்திர பிரதான்
இதற்கிடையில் கடந்த வாரம் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார். ஒரு வாரம் முழுவதுமாக முடிந்த நிலையில் இன்னும் மத்திய அரசு தீர்வு காணவில்லை.
ஜிஎஸ்டி
மேலும் 2019ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு மக்களின் வாக்குகளைக் கவர பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரும் என நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் இது அமலாக்கம் செய்யப்படும் போதே உண்மை வெளிவரும்.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
டெல்லி: 78.27 ரூபாய் (நேற்றை விலை 78.12 ரூபாய்)
கொல்கத்தா: 80.91 ரூபாய் (நேற்றை விலை 80.76 ரூபாய்)
மும்பை: 86.08 ரூபாய் (நேற்றை விலை 85.93 ரூபாய்)
சென்னை: 81.26 ரூபாய் (நேற்றை விலை 81.11 ரூபாய்)
இன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
டெல்லி: 69.17 ரூபாய் (நேற்றை விலை 69.06 ரூபாய்)
கொல்கத்தா: 71.72 ரூபாய் (நேற்றை விலை 71.61 ரூபாய்)
மும்பை: 73.64 ரூபாய் (நேற்றை விலை 73.53 ரூபாய்)
சென்னை: 73.03 ரூபாய் (நேற்றை விலை 72.91 ரூபாய்)
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications