நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான சுனில் மிட்டல் மகன் கவின் பார்தி மிட்டல் துவங்கிய ஹைக் என்னும் மெசேஜ் மற்றும் பேமெண்ட் தள நிறுவனத்தில் 25 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை தற்போது வேகமாக உயர்ந்து வரும் நிலையில் ஹைக் நிறுவனத்தில் 20-25 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்தி ஸ்டார்ட்அப் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இந்நிறுவனம் கைப்பற்றிய சீரியோ மற்றும் இன்ஸ்டாலைவ்லி நிறுவனத்தில் இருந்துதான் அதிகளவிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிறுவனம் சமீபத்தில் கைப்பற்றிய நிறுவனங்கள் மூலம் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தது. இதனால் ஊழியர்களைக் குறைத்து வர்த்தகத்தைச் சீர்ப்படுத்தும் பணியில் தற்போது ஹைக் இறங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications