பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் எப்எம்சிஜி துறையில் வேகமாக வளர்ந்துள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை இந்திய பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் உடன் இணைந்து சுதேசி சிம் கார்டு வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் வெளியிட இருக்கும் சுதேசி போன் சிம் கார்டிற்கு 144 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 2 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் சேவை வழங்கப்பட இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
சோதனை முயற்சி
சோதனை முயற்சியாகப் பதஞ்சலி நிறுவனம் வெளியிட இருக்கும் சிம் கார்டுகள் அவர்களின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக வெளியிடப்படும் போது இந்தச் சிம் கார்டினை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குப் பதஞ்சலி பொருட்களை வாங்கும் பொது 10 சதவீத சலுகை அளிக்கும் திட்டத்தில் உள்ளது.
இன்சூரன்ஸ்
பதஞ்சலி சிம் கார்டு பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்களுக்கு 2.5 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீடு மற்றும் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீடு போன்றவையும் அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.
இணைவிற்கான காரணம்
பதஞ்சலி மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்கள் இணைவது நாட்டின் நலனிற்கானது என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.
சுதேசி சிம் எங்கு எப்போது கிடைக்கும்
பிஎஸ்என்எல் உடன் இணைந்து பாபா ராம்தேவ் வெளியிட இருக்கும் இந்தச் சிம் கார்டுகள் பிஎஸ்என்எல்-ன் 5 லட்சம் கடைகள் மற்றும் நேரடி பதஞ்சலி கடைகளிலும் விரைவில் கிடைக்கும் என்றும் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல் கூறுகின்றன.
பிஎஸ்என்எல் உறுதி
பதஞ்சலி நிறுவனத்துடன் இணைந்து 144 ரூபாய் ரீசார்ஜ் செய்தால் 2 ஜிபி தரவு, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் சேவை வழங்கப்பட இருப்பதாகவும் அதற்காக ஒப்பந்த பணிகளை நடைபெற்று வருவதாகவும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முதன்மை பொது மேலாளரான சுனில் கர்க் உறுதி செய்துள்ளார்.
லாபம் & வருவாய்
நிறுவனங்களின் பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்துள்ள விவரங்களின் படி பதஞ்சலி ஆயுர்வேத் 2017-ம் ஆண்டு நிகர லாபம் 53.7 சதவீதம் உயர்ந்து 1,193.8 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது என்று கூறியுள்ளது. இதுவே வருவாய் அளவில் 87.2 சதவீதம் உயர்ந்து 9,122.2 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் திட்டம் என்ன..?


Click it and Unblock the Notifications