இந்தியாவின் மிகப் பெரிய டெலிகாம் நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் தனது மருமகனின் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட வரும் ஹோட்டெல் நிறுவனத்தில் 1 பில்லியன் டாலரினை முதலீடு செய்ய இருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன.
பார்தி குழுமம்
சுனில் மிட்டலின் பார்தி குழுமம் தங்களது குடும்ப முதலீடாக இந்தத் தொகையினைச் சரண் பாஸ்ரிகாவின் என்னிஸ்மோரின் க்ளெனாகஸ் ரிஸார்ட் மற்றும் ஹாஸ்ட்டன் ஹோட்டல் சங்கிலி நிறுவனத்திற்கு அளிக்க உள்ளது. இந்த முதலீட்டினை பயன்படுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்களது வணிகத்தினைச் சரண் விரிவுபடுத்த உள்ளார்.
சரண் பாஸ்ரிகாவின் என்னிஸ்மோர்
சரண் பாஸ்ரிகாவின் என்னிஸ்மோர் பார்தி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மின்னஞ்சல் மூலம் உறுதி செய்த நிலையில் அது குறித்த முழு விவரங்களை மட்டும் அளிக்க மருத்துவிட்டார்.
விரிவாக்கம்
2020-ம் ஆண்டுக்குள் சிக்காகோ, சா பிரான்சிஸ்கோ மற்றும் லண்டனின் சவுத் பார்க் ஆகிய இடங்களில் தங்களது ஹோட்டல்களைச் சரன் துவங்க முடிவு செய்துள்ளார்.
கிளனெக்ளஸ் ரிசார்ட்
2015-ம் ஆண்டு 232 அறை கொண்ட கிளனெக்ளஸ் ரிசார்ட்டினை சரண் பாஸ்ரிகாவின் என்னிஸ்மோர் கையகப்படுத்தி இருந்தார்.
நோகோ
தற்போது 2019-ம் ஆண்டுக்குள் நோகோ என்ற பெயரில் பட்ஜெட் சங்கிலி ஹோட்டல் நிறுவனத்தினைத் துவங்கும் திட்டத்திலும் முழுவீச்சுடன் இயங்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications