இந்தியாவில் வேலை வாய்ப்பு வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்துள்ளதாக மத்திய அரசை விமர்சித்து வரும் நிலையில் வங்கி மற்று நிதித் துறை, இ-காமர்ஸ், ரீடெயில் & கட்டுமான துறைகளில் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு இடைக்கும் என்றும் குலோபள் ஸ்டாப்பின்ங் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வேலை வாய்ப்பு
இந்திய பணியாளர் சம்மேளனத்தின் (ISF) படி, ஆட்டோமொபைல், சில்லறை விற்பனை மற்றும் இ-காமர்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய 15 துறைகளில் 81 சதவீத நபர்களுக்கு வேளை வாய்ப்பு கிடைக்க உள்ளது.
ஆட்டோமேஷன்
ஆட்டோமேஷன் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் போன்றவற்றால் வங்கி மற்றும் நிதி துறைகளில் 12 சதவீதமும், கட்டுமானம் மற்றும் மின்சாரத் துறைகளில் 11 சதவீதமும், ரீடெயில் மற்றும் இ-காமர்ஸ் துறைகளில் 5 சதவீதமும் பணிகளின் தன்மை மாறவும் வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரீடெயில் சந்தை வளர்ச்சி
ரீடெயில் சந்தை வளர்ச்சி என்பது மெட்ரோ நகரங்கள் மட்டும் இல்லாமல் இரண்டாம், மூன்றாம் தர நகரங்களிலும் வேகமான வளர்ச்சியைப் பெரும் என்றும் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் பெருகும் என்றும் இந்திய பணியாளர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
2021
மேலும் இந்திய பணியாளர் சம்மேளனத்தின் (ISF) அறிக்கை படி 2021-ம் ஆண்டுக்குள் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை வணிகத் துறையில் 12,62,120 நபர்களுக்கும், கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் 1,37,280 நபர்களுக்கு, வங்கி மற்றும் நிதி சேவை துறைகளில் 52,500 நபர்களுக்கும், ஆட்டோமொபைல் துறையில் 43,060 நபர்களுக்கும் வேலை வாய்ப்புக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications