சர்வதேச அளவில் குறைந்த விலையில் விமானப் போக்குவரத்து அளிக்கும் நிறுவனங்கள் பட்டிலில் டாப் 5 இடத்தில் இண்டிகோவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவையில் ஸ்பைஸ்ஜெட், விஸ்தரா, கோஏர் உள்ளிட்ட நிறுவனங்களும் குறைந்த விலையில் விமானச் சேவை அளித்து வருகிறன.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
சர்வதேச விமானப் போக்குவரத்து விலை பட்டியலில் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இரண்டாம் இடத்தினையும், இண்டிகோ நிறுவனம் 5 இடத்தினையும் பிடித்துள்ளன.
பாட்டியல்
ஏர்ஏசியா எக்ஸ் குறைந்த விலை விமானக் கட்டணமாக 0.07 டாலர் ஒரு கிலோ மீட்டர் எனவும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் இந்தோனேஷியா ஏர் ஏசியா நிறுவனங்கள் 0.08 டாலர் ஒரு கிலோ மீட்டர் என விமானப் பயணத்தினை அளிக்கின்றனர்.
உள்நாட்டு விமானப் பயணங்கள்
இண்டிகோ, ஏர் ஏசியா இந்தியா மற்றும் கோஏர் உள்ளிட்ட நிறுவனங்கள் 0.12 டாலர் ஒரு கிலோ மீட்டர், விஸ்தரா 0.13 டாலர் கிலோ மீட்டர், ஸ்பைஸ் ஜெட் 0.14 டாலர் ஒரு கிலோ மீட்டர், ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா 0.15 டாலர் ஒரு கிலோ மீட்டர் என விமானப் பயணத்தினை அளிக்கிறது.


Click it and Unblock the Notifications