சரிவில் தள்ளாடும் வேதாந்தா.. தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சி.. அனில் அகர்வால் சோகம்..!

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்த நிலையில், மக்களின் கடும்எதிர்ப்பால் தமிழக அரசு நேற்று வேதாந்தா குழுமத்தின் கீழ் இருக்கும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை நிரந்தரமாக மூடஉத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவை அடுத்துத் திங்கட்கிழமை மாலையிலேயே இந்தத் தொழிற்சாலைக்குத் தூத்தக்குடி கலெக்டர்தலைமையில் சீல் வைக்கப்பட்டது.

ரத்து..

ரத்து..

மேலும் இந்நிறுவனத்திற்குத் தமிழக மாசு கட்டுப்பாட்டு ஆணைய உரிமையை ரத்து செய்துள்ளது, மேலும்இந்நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்றைய வர்த்தகம்

இன்றைய வர்த்தகம்

இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனப்பங்குகள் 6.21 சதவீதம் வரையில் சரிந்து இந்நிறுவனப் பங்குகள் சுமார் 237.90 ரூபாய் அளவிற்குச் சரிந்தது.

 தொடர் உயர்வு

தொடர் உயர்வு

ஆனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தில் அதிகளவிலா முதலீடு செய்துள்ள காரணத்தால் 6 சதவீத சரிவில்இருந்து மீண்டு 1 சதவீத சரிவிற்கு உயர்ந்துள்ளது.

மதியம் 2 மணி அளவில் வேதாந்தா நிறுவனப் பங்குகள் 1.06 சதவீத சரிவுடன் 250.95 ரூபாய் விலையில் வர்த்ததம் செய்துவருகிறது.

 

லேபர் கட்சி

லேபர் கட்சி

பிரிட்டன் நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான லேபர் கட்சி, பிஜேபி போல் அல்லாமல், தூத்துக்குடி மக்களின்போராட்டம், மக்களின் உயிர் இழப்பு ஆகியவற்றைக் கண்டு லண்டன் பங்குச்சந்தையில் இருக்கும் வேதாந்தாநிறுவனத்தை நீக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

ஜான் மெக்டனெல்

ஜான் மெக்டனெல்

பிரிட்டன் நாட்டின் shadow chancellor ஆக இருக்கும் ஜான் மெக்டனெல், லண்டன் பங்குச்சந்தையின் மரியாதையைக்காக்கும் வகையில் அயோக்கிய நிறுவனமான வேதாந்தா ரெசோர்ஸை பங்குச்சந்தை விட்டு நீக்க வேண்டும். இந்நிறுவனம் பல வருடங்களாக முறையற்ற வகையில் சுரங்க தொழில் செய்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

shadow chancellor என்னும் பதவி எதிர்க்கட்சி தலைவருக்குக் கொடுக்கப்படும்.

 

கடுமையான நடவடிக்கை

கடுமையான நடவடிக்கை

தென் இந்தியாவில் தூத்துக்குடி பகுதியில் வேதாந்தா நிறுவனத்தை எதிர்த்துப் போராடிய மக்களைப் படுகொலைசெய்யப்பட்டுள்ள இந்த நிலையில் இந்நிறுவனத்தை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 லண்டன் பங்குச்சந்தை

லண்டன் பங்குச்சந்தை

வேதாந்தா நிறுவனத்தை உடனடியாக லண்டன் பங்குச்சந்தையில் இருந்து நீக்கி பங்குச்சந்தை நிர்வாகம் தனதுகடமையைச் சரியாகச் செயல்பட வேண்டும் என ஜான் மெக்டனெல் எனக் கூறியுள்ளார்.

16 சதவீதம்

16 சதவீதம்

லண்டன் பங்குச்சந்தையில் வேதாந்தா நிறுவனம் கடந்த 4 வர்த்தக நாட்களில் மட்டும் சுமார் 16 சதவீதம் அளவிலான சரிவை சந்தித்துள்ளது.

வேதாந்தா-விற்குச் செக்..!

வேதாந்தா-விற்குச் செக்..!

மே 22

மே 22

தேசிய பங்குச்சந்தையில் மட்டும் இருக்கும் வேதாந்தா நிறுவன பங்குகள் மே 22ஆம் தேதி 269.25 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட நிலையில் இன்று 252.65 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.

மோடி செய்த ரகசிய உதவிகள்..!

மோடி செய்த ரகசிய உதவிகள்..!

மத்திய அரசின் திட்டம் என்ன..?

மத்திய அரசின் திட்டம் என்ன..?

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+