ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் 2016-2017 நிதி ஆண்டில் 20,000 ரூபாய்க்கும் அதிகமாக நன்கொடை பெற்ற பெற்ற தேசிய அரசியல் கட்சிகள் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 1,194 நன்கொடைகள் பாஜக பெற்றதாகவும் அவற்றின் மதிப்பு 532 கோடி ரூபாய் என்று பாஜக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
பாஜக அடுத்தபடியாகக் காங்கிரஸ் கட்சி 599 நன்கொடைகள் மூலம் 41.90 கோடி பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தில் தேசிய கட்சிகள் அளித்த வரவு-செலவு கணக்கு அடிப்படையில் அசோசியேஷன் ஆப் டெமாக்ரடிக் ரிஃபார்ம்ஸ் அறிக்கையைத் தயாரித்துள்ளது.
2016-2017 நிதி ஆண்டில் ரூ. 20,000-க்கும் அதிகமாக நன்கொடை பெற்ற தேசிய கட்சிகள்
தேசிய கட்சிகள் 20,000 ரூபாய்க்கும் அதிகமாக 2123 நன்கொடைகளைப் பெற்றதாகவும் அவற்றின் மதிப்பு 589.38 கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளனர். பாஜக மட்டும் 1,194 நன்கொடைகள் மூலம் 532.27 கோடி ரூபாயினைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 599 நன்கொடைகள் மூலம் 41.90 கோடி ரூபாய் பெற்றுள்ளது. காங்கிரஸ், என்சிபி, சிபிஐ, சிபிஎம் மற்றும் ஏஐடிசி கட்சிகள் பெற்ற நன்கொடைகளை விடக் கூடுதலாகப் பாஜக பெற்றுள்ளது.
2015-2016 மற்றும் 2016-2017 நிதி ஆண்டுகள் ஒப்பீடு
2015-2016 நிதி ஆண்டில் தேசிய கட்சிகள் 102.02 கோடி ரூபாயினை நிதியாகப் பெற்று இருந்தனர். இதுவே 2016-2017 நிதி ஆண்டில் 478 சதவீதம் உயர்ந்து கூடுதலாக 487.36 கோடி ரூபாயினை நன்கொடையாகப் பெற்றுள்ளனர்.
பாஜக பெற்ற நன்கொடை - ஒப்பீடு
2015-2016 நிதி ஆண்டில் பாஜக 76.85 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற நிலையில் 2016-2017 நிதி ஆண்டில் 593 சதவீதம் அதிகம் என 532.27 கோடி ரூபாயினை நிதியாகப் பெற்றுள்ளது.
காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள்
தேசிய காங்கிரஸ் கட்சி 2015-2016 நிதி ஆண்டில் 71 லட்சம் ரூபாய் நிதியாகப் பெற்ற நிலையில் 2016-2017 நிதி ஆண்டில் 6.34 கோடி ரூபாயினை நிதியாகப் பெற்றுள்ளது. அனைத்து இந்திய திருனாமுல் காங்கிரஸ் கட்சி நன்கொடை 231 சதவீதமும், சிபிஎம் 190 சதவீதமும், இந்திய தேசிய காங்கிரஸ் காட்சி 105 சதவீதம் கூடுதலாக நன்கொடையைப் பெற்றுள்ளன. அதே நேஅம் சிபிஐ கட்சியின் நன்கொடை 9 சதவீதம் வரை சரிந்துள்ளது.
தேசிய கட்சிகளின் வருவாய்
2016-2017 நிதி ஆண்டில் தேசிய கட்சிகளின் மொத்த வருவாய் 1,559.17 கோடி ரூபாய் ஆகும்.
அறியப்பட்ட நன்கொடையாளர்கள்
தேசிய கட்சிகள் அறியப்பட்ட நன்கொடையாளர்களிடம் இருந்து 2016-2017 நிதி ஆண்டில் 589.38 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளனர்.
பிற வழிகள்
சொத்துக்களை விற்றது, உறுப்பினர் கட்டணம், வங்கி டெபாசிட் விகித லாபம் மற்றும் பத்திரிக்கைகள் விற்பனை போன்றவையின் மூலம் தேசிய கட்சிகள் 258.99 கோடி ரூபாய் வருவாய் பெற்றுள்ளனர்.
ஆதாரங்கள் இல்லா வருவாய்
2016-2017 நிதி ஆண்டில் தேசிய கட்சிகள் ஆதாரங்கள் இல்லாமல் மட்டும் 710.80 கோடி ரூபாய் வருவாய்ப் பெற்றுள்ளதாக வருமான வரி தாக்கலின் போது குறிப்பிட்டுள்ளன என அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இதில் பாஜக மட்டும் 464.84 கோடி ரூபாய் ஆதாரங்கள் இல்லா வருவாய் ஆகப் பெற்றுள்ளது. தேசிய காங்கிரஸ் கட்சி கூப்பன்கள் விற்றதன் மூலம் 115.64 கோடி ரூபாய் வருவாய்ப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மாநில வரியான நன்கொடை விவரங்கள்
டெல்லியில் இருந்து மட்டும் தேசிய கட்சிகள் 290 கோடி ரூபாய் நிதியும், மகாராஷ்டிராவில் இருந்து 112.31 கோடியும், உத்திர பிரதேசத்தில் இருந்து 20.22 கோடியும் தேசிய கட்சிகள் நிதிகளைப் பெற்றுள்ளன.
கார்ப்ரேட்கள்/வணிகர்கள்
கார்ப்ரேட்களும், வணிகர்களும் 708 நன்கொடைகளை தேசிய கட்சிகளுக்குச் செய்துள்ளனர். அவற்றின் மதிப்பு 563.24 கோடி ரூபாய் ஆகும். கார்ப்ரேட்கள்/வணிகர்களிடம் இருந்து பாஜக 515.43 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளது. காங்கிரஸ் 36.06 கோடி ரூபாய் பெற்றுள்ளது.
தனிநபர்கள்
அதே 2016-2017 நிதி ஆண்டில் 1354 தனிநபர்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்துள்ளதாகவும் அதன் மதிப்பு 16.82 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளனர். தனிநபர்களிடம் இருந்து பாஜக 16.82 கோடி ரூபாயும் காங்கிரஸ் 5.84 கோடி ரூபாயும் நன்கொடை பெற்றுள்ளது.
அதிகம் நன்கொடை அளித்த நிறுவனங்கள்
சத்யா எலெக்ட்ரோல் டிரஸ்ட் பாஜக-க்கு 251.22 கோடி ரூபாயும், காங்கிரஸ் கட்சியில் 13.90 கோடி ரூபாயும் நன்கொடையாக வழங்கியுள்ளது. பிஜி ஷிர்கே கன்ஸ்ட்ரக்ஷன் டெக்னாலஜி நிறுவனம் காங்கிரஸ் கட்சிக்கு 2 கோடி ரூபாய் நிதியும், ஏ என் எண்டெர்பிரைசஸ் இன்ஃப்ரா சர்வீசஸ் 1.10 கோடி ரூபாயும் நிதி அளித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications