பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 16 நாட்கள் உயர்ந்த பிறகு புதன்கிழமை ஒரு பைசா குறைந்தது தேசிய அளவில் பெரும் அளவில் விமர்சிக்கப்பட்ட நிலையில் பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிதான் பெட்ரோல் விலை உயர்வும் 1 பைசா, 12 பைசா, 27 பைசா போன்று நடந்துள்ளது. இது ஒன்றும் முதல் முறை அல்ல. நேற்று ஒரு ஊழியர் செய்த தவரால் இந்த ஒரு பைசா குறைப்பு நடைபெற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
வரவேற்பு
கேரளா அரசு ஜூன் மாதம் முதல் 1 ரூபாய் பெட்ரோல் விலையினைக் குறைப்பதாக அறிவித்துள்ள நிலையில் அதனைத் தர்மேந்திர பிரதான் வரவேற்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் அதிக வரி வசூலிக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்றும் நிதி அமைச்சகமும் முன்பு வரியை குறைக்கக் கோரிக்கை வைத்த மோது கேரள நிதி அமைச்சர் மறுத்ததாகவும் பாஜக எதிர்ப்பு மாநிலம் என்ற போது மாநில அரசு பெட்ரோல் விலையைக் குறைக்க எடுத்துள்ள நடவடிக்கையினைப் பாராட்டுவதாகவும் இதே போன்று பிற மாநிலங்களும் வரியை குறைத்தால் மக்கள் பயன்பெறுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள்
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரு பைசா பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பினை விமர்சித்த பிறகு தர்மேந்திர பிதான் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
விலை குறைப்பு
புதன் கிழமை 1 பைசா குறைத்ததைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் பெட்ரோல் விலை 7 பைசாவும், டீசல் விலை 5 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
சென்னை: 81.35 ரூபாய் (நேற்றை விலை 81.42 ரூபாய்)
டெல்லி: 78.35 ரூபாய் (நேற்றை விலை 78.42 ரூபாய்)
கொல்கத்தா: 80.98 ரூபாய் (நேற்றை விலை 81.05 ரூபாய்)
மும்பை: 86.16 ரூபாய் (நேற்றை விலை 86.23 ரூபாய்)
இன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
சென்னை: 73.12 ரூபாய் (நேற்றை விலை 73.17 ரூபாய்)
டெல்லி: 69.25 ரூபாய் (நேற்றை விலை 69.30 ரூபாய்)
கொல்கத்தா: 71.80 ரூபாய் (நேற்றை விலை 71.85 ரூபாய்)
மும்பை: 73.73 ரூபாய் (நேற்றை விலை 73.78 ரூபாய்)
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் கடந்த மூன்று நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை சரிந்து இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.11 புள்ளிகள் என 2.72 சதவீதம் உயர்ந்து 77.50 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. WTI கச்சா எண்ணெய் 2.17 சதவீதம் விலை உயர்ந்து 68.21 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது
மீண்டும் உயர வாய்ப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications