ரிலையன்ஸ் குழுமத்தின் ரிலையன்ஸ் கேப்பிடல் நிறுனத்தின் தலைவராக அனில் அம்பானியின் மகன் அன்மோல் அம்பானி நியமிக்கப்பட்ட பின்பு, அவர் தலைமையில் நடந்த மிகப்பெரிய வர்த்தகத்தில் சுமார் 25 மடங்கு லாபத்தைப் பெற்றுள்ளார் அன்மோல்.
கோடுமாஸ்டர்ஸ்
2009ஆம் ஆண்டுப் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த கோடுமாஸ்டர்ஸ் என்னும் கேமிங் நிறுவனத்தில் சுமார் 90 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் குரூப் 100 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
25 மடங்கு லாபம்
தற்போது ரிலையன்ஸ் குரூப் கட்டுப்பாட்டில் இருக்கும் 90 சதவீத பங்குகளில் 60 சதவீதத்தை அன்மோல் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிர்வாகம் 1,700 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது. இது கிட்டத்தட்ட 25 மடங்கு அதிக லாபம் என்பது குறிப்பிடத்தக்கது.
மீதமுள்ள 30 சதவீத பங்குகள்
இந்த 60 சதவீத பங்குகளைப் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் 30க்கும் மேற்பட்ட முதலீடு நிறுவனங்கள் மத்தியில் பகிரப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்திடம் மீதமுள்ள 30 சதவீத பங்குகளின் மதிப்பு 850 கோடி ரூபாயாகும்.
மேலும் கோட்மாஸ்டர்ஸ் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை அதன் நிறுவனர் மற்றும் சிஇஓ பிராங்க் சாக்னர் கையில் உள்ளது.
500 ஊழியர்கள்
தகற்போது இந்நிறுவனம் இங்கிலாந்து, மலேசியா, கோலா லம்பூர் ஆகிய 3 இடங்களில் சுமார் 500 ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. 2016இல் 31 மில்லியன் பவுண்ட் வருமானத்தைப் பெற்ற கோடுமாஸ்ட்ர்ஸ் 2018இல் இரட்டிப்பு வருமானம் அதாவது 64 மில்லியன் பவுண்ட் பெற்றுள்ளது.
ட்ரீம்வொர்க்ஸ்
ரிலையன்ஸ் குரூப் கோடுமாஸ்டர்ஸ் மட்டும் அல்லாமல் ஹாலிவுட் ஸ்டூடியோவான ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications