36 சதவீத சம்பள உயர்வு.. சஞ்சீவ் மேத்தாவிற்கு அடித்தது ஜாக்பாட்..!

நாட்டின் முன்னணி எப்எம்ஜிசி நிறுவனமான ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான சஞ்சீவ் மேத்தா 2017-18 நிதியாண்டில் மட்டும் சுமார் 19 கோடி ரூபாயைச் சம்பளமாகப் பெற்றுள்ளார்.

கடந்த நிதியாண்டில் இவர் 14 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாகப் பெற்றுள்ள நிலையில் 2017-18ஆம் நிதியாண்டில் 36 சதவீதம் அதிகச் சம்பளத்தைப் பெற்றுள்ளார்.

 ஹிந்துஸ்தான் யூனிலீவர்

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

போட்டி மிகுந்த இந்திய எப்எம்ஜிசி சந்தையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் கடந்த வருடம் கணித்ததை விடவும் அதிகளவிலான விற்பனை அளவுகளை அடைந்துள்ளது.

3 மடங்கு

3 மடங்கு

சஞ்சீவ் மேத்தா அவர்களின் போனஸ் தொகை கடந்த வருடம் பெற்ற 2 கோடியில் இருந்து இந்த வருடம் 3 மடங்கு உயர்ந்து 6 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

சராசரி சம்பள அளவு

சராசரி சம்பள அளவு

இதேபோல் இந்நிறுவன அறிக்கையின் படி இந்நிறுவன ஊழியர்களின் -சம்பள அளவுகள் சராசரியாக 4.7 சதவீதம் 2017-18இல் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மார்ச் 31 கணக்கின் படி இந்நிறுவனத்தில் தற்போது 5,725 பேர் பணியாற்றி வருகின்றனர்.

அதேபோல் நிர்வாகிகள் அல்லாத ஊழியர்கள் மத்தியில் சம்பள அளவுகள் 9.4 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளது.

 

லாபம், வருவாய்

லாபம், வருவாய்

2017-18ஆம் நிதியாண்டில் சஞ்சீவ் மேத்தா தலைமையில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் லாபத்தில் 17 சதவீத உயர்வுடன் 5,237 கோடி ரூபாயும், வர்த்தகத்தில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+