சந்தா கோச்சார் மீது புதுக் குற்றச்சாட்டு, தனி விசாரணை நடத்த ஐசிஐசிஐ முடிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சந்தா கோச்சார் மீது ஏற்கனவே வீடியோகான் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கடன் குறத்து விசாரணை நடத்து வரும் நிலையில் தற்போது இவர் மீது முக்கியமான குற்றச்சாட்டுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

புகார்

புகார்

சந்தா கோச்சார் சில வாடிக்கையாளர், கடன் பெறுபவர்களிடம் வேண்டுமென்றே விருப்பம் இல்லாதது போலும், பதிலுக்குப் பதில் என்ற வகையில் நடந்துகொள்வதாக ஐசிஐசிஐ நிர்வாகத்தில் புகார் வந்துள்ளது.

நிர்வாகக் குழு

நிர்வாகக் குழு

மேலும் ஐசிஐசிஐ வங்கி சிஇஓ பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என் நிர்வாகக் குழுவின் ஒரு பகுதியினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையிலும் சந்தா கோச்சாருக்கு ஆதரவாகவே மற்றொரு தரப்பு இருந்து வருகிறது.

தனிப்பட்ட விசாரணை

தனிப்பட்ட விசாரணை

ஆனால் தற்போது வந்த புகார் மூலம் மொத்த நிர்வாகமும் சந்தா கோச்சாருக்கு எதிராகத் திரும்பியுள்ளது. இந்நிலையில் இந்தக் குற்றச்சாட்டுகளை மையமாகக் கொண்டு சந்தா கோச்சார் மீது தனிப்பட்ட விசாரணை செய்ய ஐசிஐசிஐ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் விசாரணையில் உண்மையானால், அவர் சிஇஓ பதவியை விட்டு நீக்கவும்படலாம்.

வீடியோகான் பிரச்சனை
 

வீடியோகான் பிரச்சனை

2008ஆம் ஆண்டு வீடியோகான் நிறுவனத்தின் நிறுவனர் வேணுகோபால் தூத் புதிதாக ஒரு நிறுவனத்தைத் துவங்க திட்டமிட்டுள்ளார். இப்புதிய நிறுவனத்தில் சந்தா கோச்சார்-இன் கணவர் தீபக் கோச்சார் மற்றும் 2 உறவினர்களும் கூட்டு சேர்ந்தனர். இந்த நிறுவனத்தின் பெயர் நுபவர் ரினிவபல்.

நுபவர் ரினிவபல்

நுபவர் ரினிவபல்

நுபவர் ரினிவபல் நிறுவனத்தில் 50 சதவீத பங்குகளை வேணுகோபால் தூத்-உம், மீதமுள்ள 50 சதவீத பங்குகளைத் தீபக் கோச்சார் மற்றும் 2 உறவினர்களிடம் பிரிக்கப்பட்டது.

வெறும் 9 லட்சம்

வெறும் 9 லட்சம்

இந்நிலையில் 2010 மார்ச் மாதம் நுபவர் ரினிவபல் நிறுவனத்திற்குச் சுமார் 64 கோடி ரூபாய் அளவிலான கடன் வேணுகோபால் தூத் தலைமை வகிக்கும் சப்ரீம் எனர்ஜி நிறுவனத்திற்கு நிதி பரிமாற்றம் செய்யப்பட்டது. இதன் பின்பு சில மாதங்களில் வெறும் 9 லட்சம் ரூபாய்க்கு நிறுவனத்தின் மொத்த உரிமையும் வேணுகோபால் தூத், தீபக் கோச்சாருக்குக் கொடுத்துள்ளார்.

3,250 கோடி ரூபாய் கடன்

3,250 கோடி ரூபாய் கடன்

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து வீடியோகான் நிறுவனத்திற்கு 3,250 கோடி ரூபாய் கடன் ஒப்புதல் பெற்ற 6 மாதத்தில் வேணுகோபால், தீபக் மத்தியிலான உரிமை பரிமாற்றம் நடந்துள்ளது. இந்தக் கடனை முறைகேடாகச் சந்தா கோச்சார் வீடியோகான் நிறுவனத்திற்குக் கொடுத்துள்ளார் என அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

86 சதவீதம்

86 சதவீதம்

வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் இந்திய வங்கிகளில் இருந்து சுமார் 20,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றுள்ளார். மொத்த கடன் தொகையில் ஐசிஐசிஐ வங்கியில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள கடன் தொகையில் நிலுவையில் இருப்பது வெறும் 10 சதவீதம், அதாவது 2,000 கோடி ரூபாய். ஐசிஐசிஐ வங்கியில் வாங்கிய கடனில் 86 சதவீதம் இன்னும் வேணுகோபால் தூத் திருப்பிச் செலுத்தவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ICICI Board orders probe into Chanda Kochhar on fresh allegations

ICICI Board orders probe into Chanda Kochhar on fresh allegations
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X