சென்னை: தமிழ் நாட்டு சட்டமன்ற கூட்டத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் கலால் வரித் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தாக்கல் செய்த அமைச்சர் தங்கமணி டாஸ்மாக் வருவாய்க் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
2016-2017-ம் ஆண்டினை விட 20172018 நிதி ஆண்டில் டாஸ்மாக் வருவாய் 201 கோடி ரூபாய் சரிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
சட்டமன்ற கூட்டம்
தமிழகச் சட்டமன்ற கூட்டம் நேற்று முன் தினமும் முதல் துவங்கியுள்ள நிலையில் மதுவிலக்கு மற்றும் கலால் வரித் துறை மானியக் கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புகளைத் தாக்கல் செய்த அமைச்சர் தங்கமணி 231 கோடி ரூபாய் டாஸ்மாக் வருவாய்ச் சரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி வரி வருவாய்
தமிழ்நாட்டில் 11 இந்திய மற்றும் வெளிநாட்டு மது மான உற்பத்தி நிறுவனங்களும், 7 பீர் உற்பத்தி நிறுவனங்களும் 1 ஒயின் தயாரிப்பு நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. இங்குத் தயாரிக்கப்படும் பீர்கள் வெளிநாடுகளுக்கு 10,08,625 பீர் பாட்டில்கள் வரை ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் அதன் மூலம் தமிழக அரசுக்கு 161.69 லட்சம் கோடி ரூபாய் வரி வருவாய் கிட்டியுள்ளது.
வருவாய் சரிவு
2016-2017 நிதி ஆண்டில் டாஸ்மாக் மூலம் தமிழ் நாட்டு அரசுக்கு 26,995 கோடியே 25 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும் அதுவே 2017-2018 நிதி ஆண்டில் 26,794 கோடியே 11 லட்சம் ரூபாய் ஆகச் சரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலால் வரி
2016-2017 நிதி ஆண்டில் மது விற்பனை கலால் வரியாக 6,248 கோடியே 17 லட்சம் பெற்ற நிலையில் அது 2017-2018 நிதி ஆண்டில் 6,009 கோடியே 25 லட்சம் ரூபாயாகச் சரிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
திருட்டு
மதுக்கடைகளில் திருட்டு நடைபெறுவதாகத் தொடர்ந்து அரசுக்குப் புகார் வரும் நிலையில் 40 கடைகளில் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதிலும் உள்ள 1250 மது கடைகளில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications