2017-2018 நிதி ஆண்டிற்கான 4-ம் காலாண்டின் ஜிடிபி தரவுகளை இன்று மத்திய அரசு வெளியிட்டது அதில் மீண்டும் இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரத்தினைக் கொண்ட நாடாக முன்னேறி 7.7 சதவீதத்தினை எட்டியுள்ளது தெரியவந்துள்ளது. 2017-2018 நிதி ஆண்டில் சராசரியாக 6.8 சதவீத ஜிடிபி-ஐ இந்தியா பெற்றுள்ளது.
ப்ளூம்பெர்க் நடத்திய சர்வேயில் இந்தியாவின் ஜிடிபி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்ட நிலையில் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு இதுவே அதிகமாகும்.
தொழில் துறை உற்பத்தி
இந்தியாவின் தொழில் துறை உற்பத்தி மார்ச் மாதம் இருந்த 4.4 சதவீதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் 4.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
விவசாயம்
விவசாயத் துறையில் 4.5 சதவீதமும், உற்பத்தித் துறையில் 9.1 சதவீதமும், கட்டுமான துறையில் 11.5 சதவீதமும் வளர்ச்சி பெற்று ஜிடிபி-க்கு உதவியுள்ளன.
கச்சா எண்ணெய்
எனினும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த காரணத்தினால் ஏப்ரல் மாதம் பணவீக்கம் உயர்ந்து பொருளாதாரமும் பாதிப்படைந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயர்வது இந்தியாவின் இறக்குமதியை 50 பில்லியன் டாலராக உயர்த்தும் நிலைக்குத் தள்ளியுள்ளது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018-2019 எப்படி இருக்கும்?
2018-2019 நிதி ஆண்டில் சாதாரணப் பருவமழை மற்றும் தனியார் முதலீடு அதிகரிப்பு போன்றவையால் இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதத்திற்கும் கூடுதலாக உயரும் என்று வல்லுனர்கள் எதிர்பார்க்கின்றனர்.
முந்தைய ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி
2014-2015 நிதி ஆண்டில் 7.4 சதவீதமாகவும், 2015-2016 நிதி ஆண்டில் 8.2 சதவீதமாகவும், 2016-2017-ல் 7.1 சதவீதமாகவும் இந்தியாவின் ஜிடிபி இருந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications