யோகா குரு பாபா ராம்தேவி புதன்கிழமை வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்குப் போட்டியாகக் கிம்போ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார். இந்தச் செயலியில் வாட்ஸ்ஆப் போன்று தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த கிம்போ செயலி இன்று பிறபகல் முதல் கூகுள் பிளேஸ்டோரில் தேசிய போது கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்ற காரணத்தினை பதஞ்சலி தெரிவிக்கவில்லை என்றாலும் ஐ ஓஎஸ் கிம்போ செயலி மட்டும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.
டிவிட்
பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரான எஸ் கே டிஜர்வாலாவின் டிவிட்டர் பதிவில் "இப்போது பாரதம் பேசும். சிம் கார்டுகளுக்கு அடுத்தப் படியாகப் பாபா ராம் தேவ் தகவல் பரிமாற்ற செயலியான கிம்போ-ஐ அறிமுகம் செய்துள்ளார். வாட்ஸ்ஆப்-க்கு பொட்டியாக இந்தச் செயலி இருக்கும். நமது ##SwadeshiMessagingplatform.
இப்போது பாரதம் பேசும்
கிம்போ செயலியானது வாட்ஸ்ஆப்-க்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு டேக்லைன் "இப்போது பாரதம் பேசும்" என்று வைத்துள்ளனர்.
சுதேசி சிம் கார்டு
மே 27-ம் தேதி பிஎஸ்என்எல் உடன் இணைந்து சுதேசி சிம் கார்டு திட்டத்தினைத் துவக்கி வைத்த பாபா ராம்தேவ் அடுத்தகட்டமாக இந்தக் கிம்போ செயலியினை அறிமுகம் செய்துள்ளார்.
சலுகை
சுதேசி சிம் கார்டு முதலில் பதஞ்சலி ஊழியர்களுக்கும் அட்டும் என்றும் விரைவில் பிறருக்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் பதஞ்சலியின் சுதேசி சிம் கார்டுகள் பயன்படுத்துபவர்களுக்குப் பதஞ்சலி தயாரிப்புகளை வாங்கும் போது 10 சதவீத சலுகையும் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிம்போ என்றால் என்ன
கிம்போ சமஸ்கிருத வார்த்தை ஆகும். இதற்கு "எப்படி இருக்கிறீர்கள்? & புதிதாக என்ன உள்ளது?" என்ற பொருள் உள்ளதாகக் கூறப்படுகின்றன.


Click it and Unblock the Notifications