பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 16 நாள் உயர்வுக்குப் பிறகு இந்தியன் ஆயில் நிறுவனம் புதன்கிழமை 1 பைசா குறைத்தது. அதனைத் தொடர்ந்து சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் வியாழக்கிழமை பெட்ரோல் 7 பைசாவும், டீசல் 5 பைசாவும் இந்தியன் ஆயில் நிறுவனம் குறைத்துள்ளது. இதனால் இன்று காலை 6 மணி முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 81.35 ரூபாய் எனவும் ஒரு லிட்டர் டீசல் 73.12 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
சென்னை: 81.35 ரூபாய் (நேற்றை விலை 81.42 ரூபாய்)
டெல்லி: 78.35 ரூபாய் (நேற்றை விலை 78.42 ரூபாய்)
கொல்கத்தா: 80.98 ரூபாய் (நேற்றை விலை 81.05 ரூபாய்)
மும்பை: 86.16 ரூபாய் (நேற்றை விலை 86.23 ரூபாய்)
இன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
சென்னை: 73.12 ரூபாய் (நேற்றை விலை 73.17 ரூபாய்)
டெல்லி: 69.25 ரூபாய் (நேற்றை விலை 69.30 ரூபாய்)
கொல்கத்தா: 71.80 ரூபாய் (நேற்றை விலை 71.85 ரூபாய்)
மும்பை: 73.73 ரூபாய் (நேற்றை விலை 73.78 ரூபாய்)
சர்வதேச சந்தை
சர்வதேச சந்தையில் கடந்த மூன்று நாட்களாகக் கச்சா எண்ணெய் விலை சரிந்து இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 2.11 புள்ளிகள் என 2.72 சதவீதம் உயர்ந்து 77.50 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. WTI கச்சா எண்ணெய் 2.17 சதவீதம் விலை உயர்ந்து 68.21 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது
மீண்டும் உயர வாய்ப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ள நிலையில் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications