இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வைத்திருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் நிறுவனமும் இனி பிரெண்ட் மற்றும் துபாய் கச்சா எண்ணெய் நம்பியே தனது சுத்திகரிப்பு பணிகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
டிரம்ப் அரசு
அமெரிக்க அரசு ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் வெளியேற முடிவு செய்துள்ள நிலையில் அடுத்தச் சில மாதங்களில் ஈரான் மீது அமெரிக்க வர்த்தகத் தடை விதிக்க உள்ளது. இதனால் இந்நாட்டுடன் யாரும் வர்த்தகம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட உள்ளது.
முகேஷ் அம்பானி
இதன் எதிரொலியாகவே தற்போது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டாம் என முடிவு செய்துள்ளது. மேலும் அமெரிக்கா ஈரான் மீது விதிக்க உள்ள வர்த்தகத் தடை அக்டோபர் மாதம் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிகிறது.
ஈரான் கச்சா எண்ணெய்
இந்த வர்த்தகத் தடையினால் சர்வதேச சந்தைக்கு வரும் ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் முழுமையாகத் தடைப்படும். இதனால் கச்சா எண்ணெய் விற்பனை சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு இதன் விலை அதிகளவில் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
14 லட்சம் பேரல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஜாம்நகர் சுத்திகரிப்பு ஆலை மூலம் ஒருநாளுக்குச் சுமார் 14 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்புச் செய்கிறது.
பெட்ரோல் விலை
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
சென்னை: 81.35 ரூபாய் (நேற்றை விலை 81.42 ரூபாய்)
டெல்லி: 78.35 ரூபாய் (நேற்றை விலை 78.42 ரூபாய்)
கொல்கத்தா: 80.98 ரூபாய் (நேற்றை விலை 81.05 ரூபாய்)
மும்பை: 86.16 ரூபாய் (நேற்றை விலை 86.23 ரூபாய்)
டீசல் விலை
இன்றைய டீசல் விலை நிலவரம் (ஒரு லிட்டர்)
சென்னை: 73.12 ரூபாய் (நேற்றை விலை 73.17 ரூபாய்)
டெல்லி: 69.25 ரூபாய் (நேற்றை விலை 69.30 ரூபாய்)
கொல்கத்தா: 71.80 ரூபாய் (நேற்றை விலை 71.85 ரூபாய்)
மும்பை: 73.73 ரூபாய் (நேற்றை விலை 73.78 ரூபாய்)
நான்தான்பாரஜினிகாந்த்
சியோமி திட்டத்தால் சாம்சங் நிறுவனம் அதிர்ச்சி..!
வாட்ஸ்ஆப் போட்டியாக பாபா ராம்தேவ்
டாஸ்மாக்
More From GoodReturns

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரான் போருக்கு பிரேக்: டிரம்ப் போடும் புது கணக்கு..!! கச்சா எண்ணெய் பிரச்சினை தீருமா? தீராதா?

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்



Click it and Unblock the Notifications