மும்பை: பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வரும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஓஎன்ஜிசி-ஐ பின்னுக்குத் தள்ளி இந்தியாவில் அதிக லாபம் அளிக்கும் பொதுத் துறை நிறுவனம் என்ற பெயரை தொடர்ந்து இரண்டாம் ஆண்டாகத் தக்கவைத்து கொண்டுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் சென்ற வாரம் வெளியிட்ட 2018-2019 நிதி ஆண்டின் 4-ம் காலாண்டிற்கான அறிக்கையில் 21,346 கோடி ரூபாய் நிகர லாபம் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தது. இது 2016-2017 நிதி ஆண்டில் பெற்ற 19,016 கோடி ரூபாயினை விட 12 சதவீத உயர்வாகும்.
ஓஎன்ஜிசி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட 4-ம் காலாண்டு அறிக்கையில் 11.4 சதவீத உயர்வுடன் 19,945 கோடி ரூபாய் நிகர லாபம் அடைந்துள்ளதாகத் தெரிவித்து இருந்தது.
ரிலையன்ஸ்
2017-2018 நிதி ஆண்டு இந்திய தனியார் துறை நிறுவனங்களில் அதிக லாபம் பெற்ற நிறுவனம் என்ற பெயரினை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் பெற்றுள்ளது. 36,075 கோடி ரூபாய் உடன் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமாகத் தொடர்ந்து மூன்றாம் ஆண்டாக முதல் இடத்தில் உள்ளது
டிசிஎஸ்
தனியார் நிறுவனங்களில் இந்தியாவின் மிகப் பெரிய மென் பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் 25,880 கோடி ரூபாயுடன் 2-ம் இடத்தினைப் பிடித்துள்ளது.
ஓஎன்ஜிசி
இந்தியாவில் அதிக லாபம் அளிக்கும் நிறுவனமாக நீண்ட காலமாக ஓஎன்ஜிசி நிறுவனம் இருந்து வந்த நிலையில் மூன்று ஆண்டு முன்பு ரிலையன்ஸ் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்கள் அதனைப் பின்னுக்குத் தள்ளின.
லாபம்
மூன்று ஆண்டுக்கு முன்பு ஓஎன்ஜிசி நிறுவனத்தின் லாபம் இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனங்களின் மொத்த லாபத்தினை விட அதிக நிகர லாபம் அடைந்து வந்திருந்தது.
மானியம்
இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் அடைந்து வரும் லாபத்தினால் மத்திய அரசு அவர்களுக்கு எந்த ஒரு மானியத்தினை அளிக்கத் தேவையில்லை என்றும் ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications