பிம் செயலியில் அன்மையில் மத்திய அரசு கேஷ்பேக் சலுகைகள் அறிவித்துள்ள நிலையில் போன் பில், எரிவாயு, மின்சாரம், தண்ணீர் கட்டணங்கள் போன்றவற்றையும் செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்தப் புதிய சேவையானது ஆண்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் என இரண்டு வித இயங்குதளச் செயலிகளிலும் கிடைக்கும் என்றும் இதற்காகப் பில் செயலியை அப்டேட் எனப்படும் புதுப்பித்தல்-ஐ செய்தால் போதும் என்றும் தெரிவித்துள்ளனர்.
எந்தக் கட்டணங்களை எல்லாம் பிம் செயலி மூலம் செலுத்த முடியும்?
பிம் செயலியின் புதிய வசதிகள் மூலம் போஸ்ட்பெய்டு மொபைல் கட்டணம், போன் கட்டணம், பிராட்பேண்ட் கட்டணம், டிடிஎச், மின்சாரம், எரிவாயு மற்றும் தண்ணீர் பில் போன்றவற்றை எல்லாம் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர்.
எப்படி இந்த அம்சத்தினைப் பயன்படுத்துவது?
பிம் செயலியில் இந்தச் சேவைகளைப் பெற "பணம் பரிமாற்றம் > பில் செலுத்துதல் > எனது பில் பிரிவு" என்பதைத் தட்டுவதும் மூலம் பயன்படுத்த முடியும்.
போஸ்ட்பெய்டு மொபைல் பில்
தற்போது வோடாபோன், ஐடியா, பிஎஸ்என்எல், மற்றும் டாடா டொகோமோ போஸ்ட்பெய்டு மொபைல் பில்ககளைச் செலுத்த முடிகிறது.
பிராட்பேண்டு பில்
கன்க்ட் பிராட்பேண்ட், ஹாத்வே, ஆக்ட் ஃபைபர் நெட் மற்றும் டிக்கோனா போன்ற பிராட்பேண்ட் சேவைகள் பில்களைச் செலுத்த முடிகிறது.
லேண்ட்லைன் பில்கள்
பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் டாடா டொகோமோ லேண்ட்லைன் பில்களையும் பிம் செயலி மூலம் செலுத்த முடிகிறது. விரைவில் பிற சேவைகளும் இதில் இணைக்கப்படும் என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
பிம்
நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் நிறுவனத்தினால் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்தப் பிம் செயலி யூபிஐ சேவைகளின் கீழ் இயங்குகிறது. பிம் செயலியில் வங்கி கணக்கை இணைத்து, யூபிஐ ஐடி போன்றவற்றை உருவாக்கி எளிதாகப் பணத்தினை நொடிகளில் பிறருடன் பகிர முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications