இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில் அதனைக் குறைக்கக் கேஷ்பேக் மற்றும் சலுகைகள் எல்லாம் இருந்தால் உங்கள் மாத பட்ஜெட்டில் சிக்கல் வராமல் இருக்கும் அள்ளவா?
கர்நாடக தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 16 நாட்களில் 3.5 ரூபாய் வரௌ உயர்ந்தது. அதே நேரம் கடந்த 4 நாட்களில் 24 பைசா வரை பெட்ரோல் விலை சரிந்துள்ளது.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
சனிக்கிழமையான இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் சென்னையில் 81.19 ரூபாய், டெல்லியில் 78.20 ரூபாய், மும்பையில் 86.01 ரூபாய் மற்றும் கொல்கத்தாவில் 80.84 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
எனவே கேஷ்பாக் மற்றும் சலுகைகள் மூலமாகப் பெட்ரோல் கட்டணத்தினைச் செலுத்துவது எப்படி என்று இங்குப் பார்க்கலாம்.
பெட்ரொல் வாங்கும் போது குறைந்து 50 ரூபாய் முதல் மொபிகிவிக் செயலி QR குறியீட்டினை பயன்படுத்திப் பணம் செலுத்தினால் வாரத்திற்கு 2 முறை 10 சதவீதம் வரை சூப்ப்ர்கேஷ் சேவையில் சலுகைகளைப் பெறலாம். இந்தச் சலுகையானது 2018 ஆகஸ்ட் 1ம் தேதி வரை கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் சூப்பர்கேஷ் இல்லாமல் மோகிவிக் செயலியில் நேரடியாகப் பணம் செலுத்த முயலும் போது 0.75 சதவீதம் வரை சலுகைகளைப் பெற முடியும்.
ஸ்டாண்டர்ட் சார்டெட் சூப்பர் வால்யூ கிரெடிட் கார்டு
இந்தக் கார்டினை பயன்படுத்திப் பெட்ரோல் வாங்கும் போது மாதத்திற்கு அதிகபட்சம் 200 ரூபாய் வரை என ஒவ்வொரு பில்லுக்கும் 5 சதவீதம் கேஷ்பாக் கிடைக்கும். ஆனால் குறைந்தது 750 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கும் போது மட்டும் தான் 5% கேஷ்பாக் கிடைக்கும்.
இணை-பிராண்டட் கார்டுகள்
ஐசிஐசிஐ வங்கி எச்பிசிஎல் கோரல் அமேரிக்க எக்ஸ்பிரஸ் கிரெட்ட் கார்டு மூலம் பெட்ரோல் வாங்கும் போது செலவைக் குறைக்க முடியும். 100 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கும் 3 முதல் 6 பேபேக் பாயிண்ட் வரை இந்துஸ்தான் பெட்ரோலியம் பெட்ரோல் நிலையங்களில் பெற முடியும். அது மட்டுமில்லாமல் 1 சதவீத பரிவர்த்தனை கட்டணத்திலும் சலுகை அளிக்கப்படுகிறது.
More From GoodReturns

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications