பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை ஜூன் 1 முதல் உயர்த்துவதாக எஸ்பிஐ வங்கி சென்ற வாரம் அறிந்த போது வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் 2018 ஜூன் 1 முதல் நிதியை அடிப்படையாகக் கொண்ட கடன் கொடுப்பனவு விகிதம் எனப்படும் MCLR விகிதத்தினை எஸ்பிஐ வங்கி 0.10% உயர்த்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
MCLR விகிதம்
2018 மார்ச் மாதம் MCLR விகிதத்தினை 0.25 சதவீதம் வரை எஸ்பிஐ வங்கி மாற்றி அமைத்த நிலையில் தற்போது 0.10 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
ஒன்று மற்றும் மூன்று மாத MCLR விகிதம்
எஸ்பிஐ வங்கி ஒரே இரவில் MCLR விகிதத்தினை7.8 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக உயர்த்தியுள்ள நிலையில் மூன்று மாத MCLR விகிதம் 7.85-ல் இருந்து 7.95 ஆக உயர்ந்துள்ளது.
6 மாதம் மற்றும் 1 வருட MCLR விகிதம்
அதே போன்று 6 மாத MCLR விகிதம் 8 சதவீதத்தில் இருந்து 8.10 சதவீதமாகவும், ஒரு வருட MCLR விகிதம் 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இரண்டு மற்றும் மூன்று வருட MCLR விகிதம்
இரண்டு வருட MCLR விகிதம் 8.25 சதவீதத்தில் இருந்து 8.35 சதவீதமாகவும், மூன்று வருட MCLR விகிதம் 8.35 சதவீதத்தில் இருந்து 8.45 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.
அனைத்துக் கடன் விகிதங்களும் உயர்வு
எஸ்பிஐ-ன் MCLR விகித உயர்வால் தனிநபர் கடன், வீட்டு கடன், வாகன கடன் என அனைத்தின் வட்டி விகிதமும் ஜூன் மாதம் முதல் உயர்ந்து வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டினை அதிகரிக்கும்.
கூடுதல் வட்டி எவ்வளவு?
எஸ்பிஐ வங்கி MCLR விகித்தினை 0.10 சதவீதம் உயர்த்தியுள்ளதால் வாடிக்கையாளர் ஒருவர் 50 லட்சம் ரூபாயினை 20 வருட தவணையாக வீட்டு கடன் பெற்று இருக்கும் போது முந்தைய வட்டி விகிதம் 8.50 சதவீதமாகவும் ஜூன் மாதம் முதல் 8.60 சதவீதம் என்றால் மாதத்திற்குக் கூடுதலாக 317 ரூபாய் வட்டியைச் செலுத்த வேண்டி வரும்.
பிற முக்கிய வங்கிகள்
எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி போன்ற பிற வங்கிகளும் தங்களது கடன் திட்டங்கள் மீதான MCLR வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications