மருத்துவப் படிப்புகளில் சேர நீட் எனப்படும் நுழைவுத் தேர்வை மத்திய கல்வி வாரியமான சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் வசூல் மூலம் 100 கோடி ரூபாய் வரை சிபிஎஸ்இ லாபம் பார்த்துள்ளதாக ஆர்டிஐ ஆர்வலர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதில் அளித்ததில் இருந்து தெரிய வந்துள்ளது.
கட்டணம்
தேசிய அளவில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக நீட் நடைபெறும் நிலையில் அதற்கான கட்டணம் பிற தேர்வுகளைக் காட்டிலும் மிக அதிகம் ஆகும். ஓசி மற்றும் ஓபிசி வகுப்பினை சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க 1,400 ரூபாயும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மாணவர்கள் 750 ரூபாய்க் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்ப எண்ணிக்கை
2018-ம் ஆண்டு நாடு முழுவதும் 13 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில் எஸ்சி மற்றும் எஸ்டி மாணவர்கள் 2.60 லட்சம் நபர்கள்.
2017 வசூல் நிலவரம்
2017-ம் ஆண்டு நீட் தேர்வை நடத்திய சிபிஎஸ்இ 145 கோடி ரூபாயினை விண்ணப்ப கட்டணமாக வசூலித்து 40 கோடி ரூபாயினை மட்டுமே செலவு செய்துள்ளது. மீதம் உள்ள 105 கோடி ரூபாய் லாபம் எனத் தெரியவந்துள்ளது.
2018 வசூல் நிலவரம்
2018-ம் ஆண்டு நீட் விண்ணப்பங்கள் மூலம் 168 கோடி ரூபாயினைச் சிபிஎஸ்இ வசூலித்த நிலையில் அதற்கான செலவுகள் குறித்த விவரங்களை அளிக்கவில்லை.
கோரிக்கை
இவ்வளவு லாபம் பார்க்கும் சிபிஎஸ்இ ஏழை மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு விண்ணப்ப கட்டணத்தினைக் குறைத்தால் நன்றாக இருக்கும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வில் தோல்வியா கவலை வேண்டாம்?
தமிழக மானவர்கள் நீட் தேர்வில் குறைந்த அளவில் தான் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்ற கவலை வேண்டாம். இந்த வருடம் நீட் தேர்வில் தோல்வி அடைந்து இருந்தாலும் அடுத்த வருடத்திலும் நீட் தேர்வினை எழுத முடியும். வட இந்திய மாணவர்களுள் பலர் இது போன்று 12 -ம் வகுப்புத் தேர்வினை முடித்த பிறகு ஒரு வருடம் வரை நீட் தேர்வுக்கான பயிர்ச்சியைப் பெற்று மீண்டும் முயற்சிக்கின்றனர்.
ஒரு வருடம் வீண் என்ற கவலை வேண்டாம்?
இந்த ஒரு வருட இடைப்பட்ட காலத்தில் அடுத்த ஆண்டிற்கான நீட் தேர்விற்குப் பயிற்சி எடுப்பது மட்டும் இல்லாமல் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஒரு வருட, 6 மாத டிப்ளமோ படிப்புகளைப் படிக்கலாம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications