ரிசர்வ் வங்கியின் துணை கவர்னராகப் பொதுத் துறாஇ வங்கியான ஐடிபிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து மகேஷ் குமார் ஜெயின் நியமிக்கப்படுகிறார் என்று திங்கட்கிழமை மத்திய அரசு அறிவித்தது.
மகேஷ் குமார் ஜெயின்-க்கு 3 ஆண்டுகள் வரை இந்தப் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்றும் 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக வங்கி துறையில் அனுபவம் கொண்டவர் என்று நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறையின் செயலாளரான ராஜிவ் குமார் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எனவே ஆர்பிஐ வங்கியின் துணை கவர்னரான மகேஷ் குமார் ஜெயின் குறித்து விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் முதன் முதலாக வங்கி துறையில் பணிபுரிய துவங்கியுள்ளார் மகேஷ் ஜெயின்.
ஐடிபிஐ வங்கி
மகேஷ் ஜெயின் இடிபிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2017-ம் ஆண்டின் ஏப்ரல் மாதம் முதல் பணிபுரிந்து வருகிறார்.
இந்தியன் வங்கி
ஐடிபிஐ வங்கிக்கு முன்பு 2015 நவம்பர் முதல் 2017 மார்ச் மாதம் வரை இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணிபுரிந்துள்ளார். இந்தியன் வாங்கியில் 2013-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் நிர்வாக இயக்குநராகவும் ஜெயின் பொறுப்பு வகித்துள்ளார் என்று ஐடிபிஐ இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
சிண்டிகேட் வங்கி
மகேஷ் ஜெயின் இந்தியன் வங்கியில் சேரும் முன்பு சிண்டிகேட் வங்கியில் பொது மேலாளராகப் பணிபுரிந்துள்ளார்.
படிப்பு
எம்பிஏ மற்றும் எம்காம் படித்துள்ள மகேஷ் ஜெயின், AIIB (வங்கியியல் இந்திய நிறுவனம் சான்றளிக்கப்பட்ட அசோசியேட்), CFA (பட்டய நிதி ஆய்வாளர்) மற்றும் FRM (நிதி இடர் மேலாளர்) தகுதிகளையும் பெற்றுள்ளார்.
உர்ஜித் படேல்
ஆர்பிஐ வங்கியின் தற்போதைய கர்வனராக இருக்கும் உர்ஜித் படேல் ஜனவரி 2013 முதல் துணை கவர்னர் பதவி வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ரகுராம் ராஜன் அவர்கள் 2016 செப்டம்பர் 4-ம் தேதி அர்பிஐ கவர்னர் பதவியில் இருந்து விலகும் போது உர்ஜித் படேல் கவர்னராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications