எப்போதும் இல்லாத வகையில் தற்போது இந்தியாவின் வர்த்தத சந்தை, முதலீட்டு சந்தை, பொருளாதார அளவீடுகள் என அனைத்தும் பல ஏற்ற இறக்கங்களைச் சந்திப்பது மட்டுமல்லாமல் குழப்பமான நிலையில் உள்ளது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் தான் ரிசர்வ் வங்கி தனது இருமாத நாணய கொள்கை கூட்டத்தை நடத்தி வருகிறது.
இக்கூட்டம் நாளை முடியும் நிலையில் ரிசர்வ் வங்கி என்ன முதலீட்டுச் சந்தையின் மூலம் வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் எப்படி நிலை நிறுத்த வேண்டும் என்பதே தற்போதைய வேலையாக உள்ளது.
நாணய கொள்கை
2018ஆம் ஆண்டின் 4வது காலாண்டு பணவீக்க கணிப்புகளில் ஏப்ரல் கொள்கையில் 4.5 சதவீதமாகவும், பிப்ரவரி கொள்கையில் 5.1 சதவீதமாகவும் இருக்கும் என அறிவித்தது.
அதேபோல் 2019 முதல் அரையாண்டு பணவீக்க கணிப்புகளில் ஏப்ரல் கொள்கையில் 4.7 - 5.1 சதவீதமாகவும், பிப்ரவரி கொள்கையில் 5.1 -5.6 சதவீதமாகவும் இருக்கும் என அறிவித்தது.
2019 இரண்டாவது அரையாண்டில் பணவீக்க கணிப்புகள் ஏப்ரல் கொள்கையில் 4.4 சதவீதமாகவும், பிப்ரவரி கொள்கையில் 4.5-4.6 சதவீதமாகவும் இருக்கும் என அறிவித்தது.
ஏப்ரல் மாத கொள்கை
ரிசர்வ் வங்கியின் ஏப்ரல் மாத கொள்கையில் பணவீக்க இலக்கைக் குறைக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் பங்குச்சந்தையில் அதிக முதலீடு குவிந்தது, ஆனால் பத்திர வருவாய்ச் சரிந்தது.
இதனால் அடுத்த நாணய கொள்கையில் இதனை ஈடு செய்யும் வகையில் கண்டிப்பாக வட்டி விகிதங்கள் உயர்த்தப்படும் என ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆச்சார்யா தெரிவித்தார். இதனால் சந்தையில் பத்திர வருவாய் மீண்டும் உயர்ந்தது.
என்ன நடக்கும்..?
இத்தகைய சூழ்நிலையில் சந்தையில் கணிப்புகள் அடிப்படையில் 45 சதவீதம் பேர் வட்டி விகிதம் மற்றும் பணவீக்கம் இலக்குகளில் மாற்றம் இருக்காது எனவும் மீதமுள்ள 55 சதவீதம் பேர் வட்டி விகிதம் கண்டிப்பாக உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
நாணய கொள்கை அமைப்பு
தற்போது இருக்கும் பொருளாதாரச் சூழ்நிலையில் பணவீக்கம் இலக்கு மற்றும் வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் நாணய கொள்கையைச் சிறப்பாகச் செய்வது என்பது நாணய கொள்கை அமைப்பிற்கு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும்.
இது தான் தேவை..!!
தற்போது சந்தையில் இருக்கும் நிலையற்ற தன்மையைச் சரி செய்யவும், முதலீட்டாளர்களுக்கு ஏதுவான சூழ்நிலையை அமைத்து நீண்ட கால முதலீட்டுக்கு வழிவகுக்கும் வகையிலும், ரூபாய் மதிப்பை உயர்த்தும் வகையிலும் நீண்ட கால நன்மைகள் அடிப்படையில் கொள்கையை வடிவமைக்க வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications