4 வருடத்திற்கும் பின் வட்டியை உயர்த்தும் திட்டத்தில் ரிசர்வ் வங்கி.. என்ன நடக்கும்..?

சமானியர்கள் முதல் அன்னிய முதலீட்டாளர்கள் வரை இன்று நடந்து முடிய உள்ள ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை முடிவுகளை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

காரணம் தற்போது நாட்டின் பொருளாதார மந்த நிலை மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நீண்ட கால அடிப்படையில் முக்கிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்தே இந்தக் கூட்டத்தைத் துவங்கியுள்ளது.

இதன் மூலம் இன்று அறிவிக்கப்படும் மாற்றங்கள் சாமானியர்கள் வங்கியில் வாங்கிய கடனின் ஈஎம்ஐ முதல் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டின் லாப வளர்ச்சி வரையில் அனைத்திலும் எதிரொலிக்கும்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியால் ஏற்பட்ட வர்த்தகச் சரிவு மற்றும் பொருளாதாரப் பாதிப்புகளைக் களைய தொடர்ந்து வட்டி விகிதத்தைக் குறைத்து வந்தது ரிசர்வ் வங்கி.

இதனால் பத்திர முதலீடு மீதான லாபம் அதிகளவில் குறைந்து அன்னிய முதலீட்டு அளவு குறையத் துவங்கியது. இதனைச் சரி செய்யக் கண்டிப்பாக இப்போது வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகப் பல பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

 

4 வருடம்

4 வருடம்

இன்றைய நாணய மறுஆய்வு கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தினால் 4.5 வருடத்திற்குப் பின் வட்டி உயர்த்தப்பட உள்ளது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

மோடி ஆட்சியின் துவக்கத்தில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவில் இந்திய பொருளாதாரம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது. இதன் காரணமாக ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பில் ஏற்பட்ட பாதிப்புகளில் இந்தியா பெரிய சரிவில் இருந்து தப்பித்தது.

தற்போது மீண்டும் விலை உயர்ந்துள்ளதால் பல வழிகளில் நாட்டின் வர்த்தகமும், பொருளாதாரமும் பாதிப்படைந்து வருகிறது.

 

பத்திர முதலீடு

பத்திர முதலீடு

இன்று ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித்தை உயர்த்தினால் கண்டிப்பாகப் பத்திர முதலீடு மீதான லாபம் அதிகரிக்கும். இதன் வாயிலாகக் கடன் சந்தையில் அன்னிய முதலீட்டு அளவுகள் பெரிய அளவில் உயரவும்.

பணவீக்கம்

பணவீக்கம்

வட்டி உயர்வு செய்யப்பட்டால் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 2019ஆம் நிதியாண்டின் ஏப்ரல் செப்டம்பர் காலாண்டில் தற்போதைய கணிப்பான 4.7 சதவீத்தில் இருந்து 5.1 சதவீதமாக உயரும்.

இதனால் மக்கள் பயன்படுத்தும் அந்தியாவச பொருட்கள் அனைத்தும் விலை உயரும் அபாயமும் ஏற்படும்.

 

வங்கிக் கடன்

வங்கிக் கடன்

ரிசர்வ் வங்கி இன்று வட்டியை உயர்த்தினால் மக்கள் வங்கிகளில் வாங்கியுள்ள வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் என அனைத்துக் கடன்களின் ஈஎம்ஐ-யும் அதிகரிக்கும்.

இதனால் சமானியர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள்.

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+