இந்திய ரிசர்வ் வங்கி மோடி அரசு வந்த பிறகு முதன் முறையாக ரெப்போ வட்டி விகிதத்தினை 0.25 சதவீதம் ஆக உயர்த்தியுள்ளது. இதனால் 6 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்துவதற்கு முன்பே எஸ்பிஐம் எச்டுஎப்சி, ஐசிஐசிஐ, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆ பரோடா, யூனியன் வங்கி மற்றும் கோடாக் மஹிந்ரா வங்கி உள்ளிட்டவர்கள் MCLR விகிதத்தினை 0.05 முதல் 0.20 சதவீதம் வரை உயர்த்தினர்.
வட்டி உயர வாய்ப்பு
தற்போது ஆர்பிஐ வங்கியும் ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தி உள்ள நிலையில் வீட்டு கடன் மட்டும் இல்லாமல் பிற கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதமும் 0.05 முதல் 0.50 சதவீதம் வணிக வங்கிகள் உயர்த்த வாய்ப்புகள் உள்ளது.
உதாரணம்
ஒருவர் 50 லட்சம் மதிப்பிலான வீட்டு கடன் ஒன்றை 20 ஆண்டுகள் தவணை கீழ் வாங்க இருக்கிறார் என்றால் 8.50 சதவீத வட்டி என்னும் போது மாத தவணை 43,391 ரூபாய் செலுத்த வேண்டி வரும். வட்டி மட்டும் 54,13,878 ரூபாய் ஆகும்.
அட்டவணை
தற்போது ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீத உயர்ந்துள்ள நிலையில் அதே அளவு கடன் மீதான வட்டி விகிதம் உயர்ந்து 8.75 சதவீதம் என்றாகும் நிலையில் மாத தவணை 44,185 ரூபாய் ஆகச் செலுத்த வேண்டி வரும். வட்டி மட்டும் 56,04,529 ரூபாய் ஆகும்.
வட்டி உயர்வைக் குறைக்க வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
வங்கிகள் உங்கள் கடன் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தும் போது வட்டி உயர்வைக் குறைக்க வேண்டும் என்றால் வங்கி கிளையை அணுகி கோரிக்கை வைக்கலாம் அல்லது பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் முறைக்குக் கோரிக்கை வைக்கலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications