உஷார்.. ஆர்பிஐ ரெப்போ விகிதத்தினை 0.25% உயர்த்தியது.. உங்கள் கடன் வட்டி எல்லாம் உயரும்..!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தினை அறிவிக்கும் முன்பே சென்ற வாரம் எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட வங்கி நிறுவனங்கள் தங்களது MCLR விகிதத்தினை உயர்த்தியுள்ள நிலையில் இன்று ரெப்போ விகிதத்தினை ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் வெளியிட்டார்.

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு

ரெப்போ வட்டி விகிதம் உயர்வு

ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் ரெப்போ விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 0.25 சதவீதம் உயர்த்தி 6.25% ஆக அறிவித்து. இதனை வணிக வங்கிகள் ஏற்க்கும் போது நீங்கள் வாங்கியுள்ள கடன் மீதான வட்டி விகிதங்கள் எல்லாம் உயரும். எனவே உங்கள் கடன் வட்டி எவ்வளவு உயரும் என்ற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

வீட்டு கடன்

வீட்டு கடன்

தற்போது வங்கிகள் 8.35 சதவீதம் முதல் 8.55 சதவீதம் வட்டி விகிதம் வரையில் வீட்டு கடன் அளித்து வரும் நிலையில் 0.10 சதவீதம் முதல் 0.30 சதவீதம் வரை வீட்டு கடன் மீதான வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளது.

வாகன கடன்

வாகன கடன்

வங்கிகள் 8.50 முதல் 12.75 சதவீத வட்டி விகிதத்தில் வாகன கடன் அளித்து வரும் நிலையில் இதற்கும் வட்டி 0.10 முதல் 0.25 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.

தனிநபர் கடன்

தனிநபர் கடன்

தனிநபர் கடன் வட்டி விகிதம் 10.99 முதல் 13.90 சதவீதமாக இருந்து வந்த நிலையில் வங்கிகள் அதனை 0.10 முதல் 0.25 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்புள்ளது.

 கல்வி கடன்

கல்வி கடன்

கல்வி கடன் மீதான வட்டி விகிதமும் 0.10 சதவீதம் முதல் 0.25 சதவீதம் வரை வங்கிகள் உயர்த்த வாய்ப்புள்ளது.

எஸ்பிஐ வங்கி

எஸ்பிஐ வங்கி

பாலிசி விகிதங்கள் குறித்த எந்தவொரு முடிவும் திட்டமிடப்பட வேண்டும், சரியான நியாயத்தை வழங்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி ஆர்பிஐ ரெப்போ வட்டி விகித அறிவிப்பிற்கு முன்பு தெரிவித்து இருந்தது.

தற்போது MCLR விகிதத்தினை உயர்த்தியுள்ள வங்கிகள்

தற்போது MCLR விகிதத்தினை உயர்த்தியுள்ள வங்கிகள்

2018 ஜூன் 1ம் தேதி முதல் எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆ பரோடா, யூனியன் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கோடாக் மகேந்திரா வங்கிகள் கடன் மீதான MCLR விகிதத்தினை 0.05 முதல் 0.20 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+