ராம்தேவ் திட்டத்திற்கு யோகி எதிர்ப்பு.. பதஞ்சலி எடுத்த அதிரடி முடிவு..!

யோகா குரு பாபா ராம்தேவ் தற்போது நாட்டின் மிகமுக்கிய தொழிலதிபராக உயர்ந்துள்ளார், இவரது தலைமையிலான பதஞ்சலி நிறுவனம் உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய உணவு பூங்காவை அமைக்கத் திட்டமிட்டு வந்த நிலையில், மாநில அரசு இத்திட்டத்திற்குத் திடீரென மறுப்பு தெரிவித்துள்ளது.

பதஞ்சலி

பதஞ்சலி

ராம்தேவ் தலைமையிலும், ஆச்சார்யா பாலகிருஷண்னா நிர்வாகத்தின் கீழ் இந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் பதஞ்சலி ஆயுர்வேத் லிமிடெட் நிறுவனம் நொய்டாவில் பதஞ்சலி புட் அண்ட் ஹெர்பல் பார்க்-ஐ அமைக்க மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ள நிலையில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இத்திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆச்சார்யா பாலகிருஷண்னா

ஆச்சார்யா பாலகிருஷண்னா

யோகி ஆதித்யநாத் அரசு அலட்சிய மனப்பான்மை உடன் நடந்துகொண்டது மட்டும் அல்லாமல் இத்திட்டத்தின் முக்கியத்துவம் அறியாமல் அனுமதி வழங்க மறுக்கிறது எனப் பதஞ்சலி ஆச்சார்யா பாலகிருஷண்னா தெரிவித்துள்ளார்.

டிவீட்

டிவீட்

இந்நிலையில் ஆச்சார்யா பாலகிருஷண்னா தனது டிவிட்டரில், மத்திய அரசு ஒப்புதல் அளித்த நொய்டா உணவு பூங்கா திட்டத்திற்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு அனுமதி வழங்க மறுக்கிறது. இதனால் இத்திட்டத்தை வேறு நகரத்திற்குக் கொண்டு செய்ய முடிவு செய்துள்ளோம் எனக் கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

2016இல் அப்போதை முதல்வரான அகிலேஷ் யாதவ் இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டினார், இந்தப் பூங்கா 455 ஏக்கர் நிலத்தில் சுமார் 1,666.8 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டில் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இதுமட்டும் அல்லாமல் பதஞ்சலி இந்த உணவு பூங்காவை அமைப்பதன் மூலம் சுமார் 8,000 பேர்க்கு நேரடி வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

அந்தர் பல்டி

அந்தர் பல்டி

தற்போது இந்தப் பிரச்சனை உத்தரப் பிரதேசத்தில் பெரிதாக வெடித்துள்ள நிலையில், இதற்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மாநில அரசு நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது.

எல்லாவற்றுக்கும் மோடி தான் காரணம்.

எல்லாவற்றுக்கும் மோடி தான் காரணம்.

அடுத்த அதிரடி திட்டத்தில் வேதாந்தா குழுமம்!

அடுத்த அதிரடி திட்டத்தில் வேதாந்தா குழுமம்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+