கோல் இந்தியா நிறுவனம் 20,000 ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகையாக 6,000 கோடி ரூபாயினை ஒதுக்கியுள்ளது. இதனால் கார்ப்ரேட் நிறுவனங்களை விடப் பல மடங்கு அதிகமாகக் கோல் இந்தியா ஊழியர்களுக்கு 32 முதல் 37 சதவீத சம்பள உயர்வு அளிக்க வாய்ப்புள்ளது தெரியவந்துள்ளது.
நிதி பகிர்வு
2018-2019 நிதி ஆண்டில் ஊழியர்களுக்காக ஒதுக்கியுள்ள 6,000 கோடி ரூபாயில் 2,500 கோடி ரூபாய் ஆண்டுச் சம்பள உயர்வுக்காகவும், 3,500 கோடி ரூபாய் நிலுவை தொகைக்காகவும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஊதிய உயர்வு
ஊழியர்களுக்கு 10 சதவீத அடிப்படை ஊதிய உயர்வு மற்றும் அகவிலைப்படி போன்றவை மட்டும் இல்லாமல் ஓய்வூதியத்திற்காகவும் விரவில் 24,000 கோடி ரூபாயினை ஒதுக்கக் கோல் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
நிர்வாகிகள்
கோல் இந்தியாவின் நிர்வாகிகளுக்கு 15 முதல் 20 சதவீத சம்பள உயர்வினை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான சம்பள உயர்வினால் மட்டும் நிறுவனத்திற்கு ஆண்டுக்கு 1,000 கோடி ரூபாய் வரை செலவானது.
ஒப்புதல்
முதற்கட்டமாக 10 சதவீத ஊதிய உயர்வினை கோல் இந்தியாவின் ஊழியர்களுக்கு வழங்க நிலக்கரி அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications