பெங்களூரு: ஸ்வீடிஷ் வணிக வாகன உற்பத்தியாளரான ஸ்கானியா செவ்வாய்க்கிழமை பெங்களூரு அருகில் உள்ள தங்களது பேருந்து பாடி பில்டிங் பட்டறையை மூட முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஸ்கானியா பேருந்து உற்பத்தியினை நிறுத்திவிட்டு இறக்குமதி மூலம் மட்டுமே வர்த்தகத்தினைத் தொடர இருப்பதாகவும் இதற்காக வணிகத்தினை மறுசீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
காரணம்
இந்தியாவில் பிரீமியம் பேருந்து உற்பத்தியினை ஸ்கானியா நிறுவனம் செய்து வந்த நிலையில் அதற்காகத் தேவை இங்கு மிகவும் குறைவாக உள்ளதால் மூட இருப்பதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றனர்.
ஸ்கானியா
இந்தியாவில் ஸ்கானியா நிறுவனம் 300 கோடி ரூபாய் முதலீட்டில் டிரக் மற்றும் பெங்களூருவில் பேருந்து கட்டமைப்புப் பட்டறை இரண்டையும் இயக்கி வந்தது.
உற்பத்தி
ஸ்கானியா இந்தியா நிறுவனம் ஆனது ஆண்டுக்கு 2,500 டிரக்குகளும், 1,000 பேருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது இந்த உற்பத்தியை நிறுத்த முடிவு செய்து இருப்பினும் எப்போதும் போலப் பேருந்துகளும், டிரக்குகளும் கிடைக்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் ஸ்கானியா தெரிவித்துள்ளது.
லாபம் இல்லை
இந்தியாவில் பிரீமியம் பேருந்து மற்றும் டிரக்க்குகளுக்குத் தேவை மிகவும் குறைவாக உள்ளதாகவும் அதனால் ஆர்டர்கள் குறைவாக உள்ளது மட்டும் இல்லாமல் லாபமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஊழியர்கள்
ஸ்கானியா இந்தியாவில் 500 ஊழியர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களின் வேலை பறிபோக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் பெரும்பாலான ஒப்பந்த ஊழியர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 111 நேரடி ஸ்கானியா ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் 44 ஊழியர்கள் மற்றும் தக்கவைத்துக்கொண்டு எப்போதும் போல வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஆர்டர்கள்
தற்போது ஸ்கானியா வசம் பேருந்துக்கான ஆர்டர்கள் ஏதுமில்லை என்றாலும் சந்தைக்குத் தேவையான ஸ்டாக்குகளை அவுட் சோர்ஸ் முறையில் பெற முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பணிநீக்க திட்டம்
ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படும் நிலையில் அவர்களுக்கான தேவைகளைப் பூர்த்திச் செய்யத் தேவையான உதவிகளை நிறுவனம் செய்யும் என்றும் ஸ்கானியா தெரிவித்துள்ளது.
பிடித்த தொழிலை ஜாலியாக செய்யும் ஸ்வேதா..
வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மகிழ்ச்சி..!
கெத்து காட்டும் ராயல் என்பீல்டு..!
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications