மின்சாரக் கட்டண பில்லை வீட்டிற்கு வந்து அளிக்கும் முறையினைக் குறைக்க டிஜிட்டல் முறையில் மீட்டர்களை மாற்றிப் பிரீபெய்டு மின்சார விநியோக முறை திட்டத்தினை 3 ஆண்டுகளில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் பயன்படுத்திய மின்சாரத்திற்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறை மாறி மின்சாரம் பயன்படுத்த வேண்டும் என்றாலே கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே மின்சாரக் கட்டணம் எப்படி வசூலிக்கப்படும், எப்படிக் கணக்கிடப்படும் என்ற விவரங்களை விரிவாக இங்குப் பார்ப்போம்.
டிஜிட்டல் மீட்டர்
பிரீபெய்டு மின்சாரத் திட்டத்தினைக் கொண்டு வரும் திட்டத்தினைக் கொண்டு வரும் திட்டத்தினைப் பற்றி அறிவித்துள்ள மத்திய அமைச்சரான ஆர் கே சிங் மின்சாரக் கணக்கெடுப்பு மீட்டார்களை மூன்று ஆண்டுகளில் டிஜிட்டல் முறையாக மாற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மணி நேரப்படி கட்டணம்
பிரீபெய்டு மின்சாரத் திட்டம் அமலுக்கு வரும் போது ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு கட்டணம் என வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் மின்சாரம் மற்றும் புதிய & புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உற்பத்தியாளர்கள் கூட்டம்
பிரீபெய்டு திட்டத்திற்கு ஏற்றவாறு மின்சார மீட்டரினை ஊக்குவிக்குமாறு உற்பத்தியாளர்களிடையான கூட்டத்தினை ஒன்றையும் ஆர் கே சிங் நடத்தியுள்ளார். மேலும் இந்தப் புதிய இயந்திரத்திற்கு வரும் ஆண்டுகளில் அதிக டிமேண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
குஷம் திட்டம்
விவசாயிகளுக்கான 1.4 லட்சம் கோடி மதிப்பிலான சூரிய மின்சாரத் திட்டத்தினையும் அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு இந்தத் திட்டமானது ஜூலை மாதம் முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சவுபாக்யா திட்டம்
2019 மார்ச் மாதத்திற்குள் மத்திய அரசு 4 கோடி ஏழைக் குடும்பங்களுக்குச் சவுபாக்யா திட்டத்தின் கீழ் மின்சார இணைப்பினை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
போஸ்ட்பெய்டு
மொபைல் போன் ரீசார்ஜ் போன்று பிரீமிய்டு திட்டத்தினை அறிமுகம் செய்யும் போது போஸ்ட்பெய்டு மின்சாரத் திட்டமும் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications