பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பாலகிருஷ்ணா தலைமையில் இயங்கி வரும் பதஞ்சலி நிறுனத்தின் பதஞ்சலி உணவு மற்றும் ஹெர்பல் பார்க்-ஐ உத்தரப் பிரதேசத்தில் அமைக்க அம்மாநில அரசு நிலம் வழங்க மறுத்த நிலையில், இப்பூங்காவை வேறு மாநிலத்திற்கு மாற்றத் திட்டமிட்டது பதஞ்சலி நிர்வாகம்.
இந்தப் பிரச்சனை பெரிதாக வெடித்த நிலையில் உணவு பூங்காவையும், அதன் மூலம் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளைக் காப்பாற்றிக்கொள்ள யோகி ஆதித்யநாத் பல முக்கியச் சலுகையைப் பதஞ்சலி நிறுவனத்திற்கு அளித்துள்ளார்.
அரசு வேலைகள்
பதஞ்சலி நிறுவனத்திற்கு அறிவிக்கப்பட்டு இருந்த நிலத்தை அளிக்குமாறு இந்நிறுவனம் மாநில அரசிடம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தது. இந்தக் கோரிக்கையை நிராகரிப்புச் செய்யப்பட்ட நிலையில் இப்பூங்கா வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் எனப் பதஞ்சலி நிறுவன தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா அறிவித்தது பெரும் பிரச்சனையை உருவாக்கியது.
யோகி ஆதித்யநாத்
இந்நிலையில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் உத்தரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாகத் தலையீட்டு பதஞ்சலி உணவு மற்றும் ஹெர்பல் பார்க்-கிற்கு ஒதுக்கப்படும் நிலம் குறித்துச் சட்டசபையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சலுகை
இந்தப் பிரச்சனையை முழுமையாகத் தீர்க்கவும், யோகி ஆதித்யநாத் அரசுக்கும் பதஞ்சலி நிறுவனத்திற்கும் இடையில் இருந்த கருத்து வேறுப்பாட்டைக் களைய வேண்டும் என்றும், உணவு பூங்காவை தன் மாநிலத்திற்குள்ளேயே வைத்துக்கொள்ளவும் உத்தரப் பிரதேசம் அரசு பாபா ராம்தேவ்-இன் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு நிறுவனத்திற்குச் சுமார் 86 ஏக்கர் நிலத்தை உள் குத்தகைக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
455 ஏக்கர்
ஏற்கனவே பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்திற்கு அகிலேஷ் யாதவ் தலைமையிலான ஆட்சியில் 455 ஏக்கர் நிலத்தை 25 சதவீத தள்ளுபடி விலையில் நவம்பர் 2, 2016இல் அளிக்கப்பட்டது.
கோரிக்கை
இதன் பின்னர் மார்ச் 23, 2018இல் உணவு பூங்காவிற்கு 86 ஏக்கர் நிலம் உள் குத்தகைக்கு அளிக்க வேண்டும் எனப் பதஞ்சலி நிறுவனம் மாநில அரசிடம் கோரிக்கை வைத்தது.
தற்போது அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்டுப் பதஞ்சலி உணவு பூங்கா அமைக்க 86 ஏக்கர் நிலையைப் பதஞ்சலி நிறுவனம் பெற்றுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications