சொன்னதை செய்தார் ஆனந்த மஹிந்தரா.. காலா ரஜினியின் கருப்பு குதிரை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் வெளிவந்துள்ள காலா திரைப்படத்தில் போஸ்டரில் இடம்பெற்ற தார் கார் தனக்கு வேண்டும் என்று மகேந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த மகேந்திரா டிவிட் போட்டு இருந்தார்.

 

தற்போது அந்தத் தார் கார் மகேந்திரா குழுமத்தின் சென்னை கிளையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அதில் மகேந்திரா ஊழியர்கள் காலா ரஜினிகாந்த் போன்று போஸ் கொடுத்து படமும் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

காலா ‘தார்’ கார்

அதனை உறுதி செய்து தான் முன்பு கூறியது போன்று காலா திரைப்படத்தில் தலைவர் பயன்படுத்திய காரினை சென்னை மகேந்திரா ரிசர்ச் வேலியிடம் தனுஷ் ஒப்படைத்துள்ளார் என்றும் அதில் எங்களது ஊழியர்களைக் காலா ரஜினி போன்று படம் எடுத்து மகிழக் கூறியுள்ளேன்! (லுங்கியில் உள்ள அந்த நபரின் பெயர் காலா பாலா) என்றும் டிவிட் போட்டுள்ளார்.

ரஜினி அரசியல் அறிவிப்பு

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது ஏற்பட்ட அரசியல் அதிர்வலையின் போது இப்போது மட்டும் தமிழ் நாடு ஒரு நிறுவனத்தின் பங்குகளாக இருந்தால் மொத்த பங்குகளையும் நான் வாங்கியிருப்பேன் என்றும் ஆனந்த் மகேந்திரா குறிப்பிட்டிருந்தார்.

செல்பி

காலா திரைபடத்தில் ரஜினி பயன்படுத்திய கார் முன்பு செல்பி எடுக்க விரும்புபவர்கள் சென்னை போங்க: ஆனந்த் மஹிந்தரா

மகேந்திரா ஸ்கார்பியோ ஆட்டோ
 

மகேந்திரா ஸ்கார்பியோ ஆட்டோ

சென்ற வருடம் கேரளாவை சேர்ந்த ஒருவர் ஆட்டோ ஒன்றை மகேந்திரா ஸ்கார்பியோ போன்று மாற்றம் செய்து ஓட்டி வந்ததைச் சமுக வலைத்தளப் பதிவாகப் பார்த்த ஆன்ந்த மகேந்திரா அந்த ஆட்டோவை பெற்றுக்கொண்டு அவருக்கு மகேந்திரா வேன் ஒன்றைப் பரிசாக அளித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஷூ மருத்துவர்

அது மட்டும் இல்லாமல் ஷூ மருத்துவர் ஒருவருக்காக அன்மையில் கியாஸ்க் பெட்டிக்கடை ஒன்றை வடிவமைத்துக் கொடுத்ததும் ஆனந்த மகேந்திரா பல பாராட்டுகளைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் கேம்பிர்டிஜ் அனலிட்டிகா உடன் இணைந்து அமெரிக்க மற்றும் இந்திய தேர்தலின் போது பயனர்களை திசை திருப்பியதாக கூறப்பட்ட நிலையில் இந்தியாவிற்கான சமூகவலைதளம் ஒன்று வேண்டும் என்றும் ஆனந்த் மஹிந்தரா கூறியிருந்தார்.

கற்பழிப்பு

சூரத்தில் 9 வயது பெண் குழந்தையினை கற்பழித்து கொலை செய்து இருந்து மற்றும் கத்துவா கற்பழிப்பு போன்றவை செய்திகள் ஊடகங்களில் வெளியான போதும் தனது கருத்துக்களை அனந்த மஹிந்தரா கருத்துக்களை டிவிட்டரில் பதிவு செய்து எதிர்ப்புகளை காட்டியுள்ளார்.

முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி..

முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி..

முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!

எஸ்பிஐ

எஸ்பிஐ

மனைவியின் எஸ்பிஐ டெபிட் கார்டை கணவர் பயன்படுத்தியதால் வந்த சோதனை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Mahindra Acquires Rajinikanth’s ‘Kaala’ Car For His Museum From Chennai

Anand Mahindra Acquires Rajinikanth’s ‘Kaala’ Car For His Museum
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X