ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் மற்றும் இந்தியாவின் மிகப் பெரிய கோடிஸ்வரரும் ஆன முகேஷ் அம்பானி கடந்த 10 வருடங்களாக ஒரே சம்பளத்தினைத் தான் வாங்கி வருகிறாராம். நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை வியாழக்கிழமை வெளியான நிலையில் பிற நிர்வாக இயக்குனர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவர் எடுத்து இருக்கும் தனிப்பட்ட முடிவு இது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
எவ்வளவு சம்பளம்?
தொடர்ந்து 10 ஆண்டுகளாகச் சம்பள உயர்வே வேண்டாம் என்று 15 கோடி ரூபாயினை மட்டுமே சம்பளமாக முகேஷ் அம்பானி பெற்று வருகிறார்.
சம்பளத்தில் எதுவெல்லாம் அடங்கும்?
முகேஷ் அம்பானியின் சம்பளத்தில் அவரது கொடுப்பனுவுகள், ஊதியம், ஓய்வு நலன்கள், மற்றும் கமிஷன் என அனைத்தும் அடங்கும்.
ஃபோர்ப்ஸ்
2018-ம் ஆண்டின் ஃபோர்ப்ஸ் பட்டியல் படி முகேஷ் அம்பானியின் செல்வ மதிப்பு 16 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளதாகவும், தற்போது இவரது சொத்து மதிப்பு 40.1 பில்லியன் டாலர் எனவும் குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச கோடிஸ்வரர்கள் பட்டியல்
உலகம் முழுவதிலும் உள்ள 2,208 கோடிஸ்வரர்கள் பட்டியலில் 19 இடத்தினை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். 2017-ம் ஆண்டு இந்தப் பட்டியலில் இவர் 23.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 33 வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications