2024-ம் ஆண்டு வரை இவரே தான் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர்.. அம்பானி அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் அடுத்த 5 வருடத்திற்கும் முகேஷ் அம்பானியே தான் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் என்ற முடிவினை எடுத்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள செய்திகள் கூறுகின்றன.

முகேஷ் அம்பானிக்குத் தற்போது 61 வயது ஆகும் நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் போர்டு உறுப்பிராக 1977-ம் ஆண்டு முதல் உள்ளார். பின்னர் 2002-ம் ஆண்டு இவரது தந்தை திருபாய் அம்பானி இறந்த பிறகு தலைவராகப் பொறுப்பேற்றார். அப்போது முதல் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

பதவி காலம் நீட்டிப்பு

பதவி காலம் நீட்டிப்பு

முகேஷ் அம்பானியின் பதவிக் காலம் 2019 ஏப்ரல் 19 உடன் முடிவடையும் நிலையில் அதனை இன்னும் 5 ஆண்டுகளுக்காக நீட்டக்க் முடிவு செய்துள்ளதாகவும், வர இருக்கும் ஜூலை 5-ம் தேதி ரிலையன்ஸ் குழுமத்தின் 41வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அப்போது அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சம்பளம்

சம்பளம்

கடந்த 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தில் உள்ள தனது தலைவர் பதவிக்கான வருமான உயர்வை பெறாமல் 15 கோடி ரூபாயினையே ஆண்டுச் சம்பளமாகப் பெற்றுவருவதாகவும் அதில் இவரது கொடுப்பனுவுகள் அடங்கும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

ஊழியர்களை விடக் குறைவான சம்பளம்

ஊழியர்களை விடக் குறைவான சம்பளம்

முகேஷ் அமானியின் சம்பளம் அவரது கீழ் மட்ட ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தினை விடக் குறைவாக உள்ளதும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது. தனக்குச் சம்பள உயர்வு வேண்டாம் என்பது எனது தனது தனிப்பட்ட விருப்பம் அதற்காக அதனை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.

 அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்

அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்

அம்பானியின் உறவினர்களான நிஹில் மிஸ்வானி மற்றும் ஹிட்டல் மெஸ்வானி இருவரும் ஆண்டுச் சம்பளமாக 19.99 கோடி ரூபாய் சம்பளம் பெறுகின்றனர். இதுவே இவர்கள் 2016-2017 நிதி ஆண்டில் 16.58 கோடி ரூபாய் ஆகச் சம்பளம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RIL Seeks Extending Mukesh Ambani's Term By 5 Years But Salary Is Less Then His Subordinates

RIL Seeks Extending Mukesh Ambani's Term By 5 Years But Salary Is Less Then His Subordinates
Story first published: Saturday, June 9, 2018, 13:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X