இந்தியாவில் பசுக்கள் மீது உள்ள மத உணர்வுகள் போன்ற காரணங்களால் அமெரிக்கப் பால் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒன்றும் புதிது அல்ல என்ற போதிலும் இதனைப் பயன்படுத்தி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 3,500 பொருட்களுக்கு டுயூட்டி பிரீ வேண்டும் என்றால் அமெரிக்கச் சீஸ்க்கு அனுமதி அளியுங்கள் என்று கடிதம் அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
2003-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசு அமெரிக்கப் பால் பொருட்களை இந்தியாவில் இறக்குமதி செய்யத் தடை விதித்தது.
வர்த்தகப் போர்
தற்போது டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு தங்களுக்குக் கீழ் படியாத நாடுகள் மீது வர்த்தகப் போர் எடுத்து வரும் நிலையில் அதனைப் பயன்படுத்தி அமெரிக்கப் பால் பொருட்கள் உற்பத்தித் துறை மீண்டும் இந்தியாவில் கால் பதிக்க உள்ளது.
சைவம்
இந்தியாவில் பசுக்களுக்கு முழுமையாகச் சைவ உணவுகள் அளிக்கப்படும் நிலையில் அமெரிக்காவில் பசுக்களுக்கு அசைவம் சார்ந்த உணவுகள் அளிக்கப்படுவதாகவும் அதனால் தான் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீர்வு
இந்திய அரசு அமெரிக்காவில் இருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்யத் தயார் என்றும் ஆனால் அமெரிக்காவில் பசுக்களுக்கு அளிக்கப்படும் இரத்த உணவு போன்ற சில வகை உணவுகளை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க தேசிய வர்த்தக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறியீடு
மேலும் இது போன்று அசைவ உணவுகள் அளிக்கப்பட்ட பசுக்களிடம் இருந்து பெறப்பட்ட பால் பொருட்களை விற்கும் போது அந்தத் தயாரிப்பின் பாக்கெட்களில் சிவப்பு நிற குறியீடு இருக்க வேண்டும் என்ற திட்டத்தினையும் மோடி தலைமையிலான அரசு தீர்வு அளித்துள்ளது.
கோழி கறி
அமெரிக்க நிறுவனங்கள் பதப்படுத்தப்பட்ட கோழி கறிகளை இந்தியாவில் விற்க இருந்த தடையினை உலக வர்த்தகச் சபையிடம் முறையிட்டு அனுமதி பெற்ற நிலையில் அதே போன்று பால் பொருட்களுக்கு எப்படியாவது அனுமதிகளைப் பெற வேண்டும் என்று அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய பால் சந்தை
இந்தியாவில் பால் பொருட்களுக்கு மிகப் பெரிய சந்தை உள்ள நிலையில் அதில் எப்படியாவது நுழைந்து விட வேண்டும் என்று அமெரிக்கப் பால் பொருட்கள் துறை முடிவு செய்துள்ளது. இதற்காகவே அமெரிக்க தேசிய பால் உற்பத்தி கூட்டமைப்பு டிரம்ப் அரசுக்கு அழுத்தம் அளித்து டுயூட்டி பிரீயை நீக்குவதாக வர்த்தகப் போர் செய்யும் படி கூறி வருகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications