சிறு சேமிப்பு திட்டங்களான பிபிஎப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி, கிசாவ் விகாஸ் பத்ரா, தேசிய சேமிப்பு பத்திய, சுகன்யா சம்ரிதி யோஜனா போன்றவற்றின் வட்டி விகிதம் வரும் காலாண்டு முதல் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு 10 ஆண்டுப் பத்திர திட்டங்கள் மீதான வருவாய் உயர்வு, இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தினை 6.25% ஆக உயர்த்தி இருப்பது போன்றவை இதற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகிறது.
எனவே ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு எவ்வளவு வட்டி விகித லாபம் அளிக்கப்படுகிறது என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
பிபிஎப் மற்றும் என்எஸ்சி
பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்புப் பத்திரம் ஆகிய திட்டங்களில் 2018 ஏப்ரல் முதல் 2018 ஜூன் வரை 7.6 சதவீதமாக வட்டி விகித லாபம் அளிக்கப்படும்
கிசான் விகாஸ் பத்திரா
கிசான் விகாஸ் பத்திரா திட்டம் கீழ் முதலீடு செய்தவர்களுக்கு 7.3 சதவீதமாக வரும் காலாண்டில் வட்டி விகித லாபம் அளிக்கப்படும்.
செல்வ மகள் திட்டம்
சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்புத் திட்டம் மீதான வட்டி விகிதம் 7.3 சதவீதமாக அளிக்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
மூத்த குடிமக்களுக்கான 5 வருட சேமிப்புத் திட்டம் மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் மூத்த குடிமக்களுக்கு 8.3 சதவீத வட்டி விகிதம் லாபம் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேமிப்பு கணக்கு
தபால் அலுவலகத்தில் உள்ள சிறு சேமிப்பு கணக்கு மீதான வட்டி விகிதமும் 4 சதவீதமாகத் தொடருகிறது.
வட்டி விகிதம் எப்படிக் கணக்கிடப்படுகிறது?
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் நடப்பு காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வட்டி விகிதம் குறைக்கப்படவில்லை. அரசு பத்திரங்கள் கீழ் கிடைக்கும் லாபத்தினை வைத்துச் சிறு சேமிப்புத் திட்டங்கள் மீதான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications