பலரும் பல கட்டத்தில் பிடிக்காத வேலைலை செய்திருப்போம், அவற்றில் இருந்து வெளியேற நாம் பலவற்றை முயற்சி செய்து தோற்றுப்போய் இருப்போம். இன்றும் சந்தையில் திறமை இருந்தால் போது வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிடிக்காத வேலையைச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
10 நாட்களில் உங்கள் வேலையை விட்டு வெளியேறுவது எப்படி என இங்கே காணலாம்.
நாள்1: தாமதமாகச் செல்தல்
வேலைக்குத் தாமதமாகச் செல்லுங்கள். தினமும் அதையே தொடருங்கள். சமீபத்தில் தான் புதிய வேலையில் சேர்ந்துள்ளீர்கள் எனில் இது இன்னும் நன்றாக வேலை செய்யும். கலந்துரையாடல்களில் முதல் 30 நிமிடங்களில் உங்களுக்கு என்ன வேலையும் இல்லை எனக் கருதிக்கொண்டு தாமதமாகவே செல்லுங்கள். நீண்ட காலத் தந்திரமாக, வேலையைச் சரியான நேரத்தில் முடிக்காதீர்கள் மற்றும் கூட்டங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து விடுங்கள். எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் மற்றவர்களைக் காத்திருக்க வைத்து அவர்களின் வேலையை முடிக்க விடாமல் தொல்லை கொடுங்கள்.
நாள்2: மோசமான ஆடை
முந்தைய நாள் இரவு விருந்துக்குச் சென்று வந்தீர்களா? வேலையே செய்யாமல் அதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் அல்லது வேலை செய்யத் தயக்கம் காட்டுங்கள். அல்லது முந்தைய நாள் அணிந்த ஆடைகளை மாற்றாமல் அப்படியே வேலைக்குச் செல்லுங்கள். வேலைக்குச் செல்லும் நாட்களில் குளிப்பதற்கு நேரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். விடுமுறை நாட்கள் அதற்காகத் தானே இருக்கிறது. நீண்ட கால முயற்சியாக, அனைவரின் கண்களையும் உறுத்தும்படி, சுகாதாரமில்லாத வகையில் நடந்துகொள்ளுங்கள். அலுவலக நன்னடத்தை விதிகளைக் கடைப்பிடிக்க மறுத்து மற்றவர்களைச் சங்கடப்படுத்துங்கள்.
நாள்3 : என்னுடைய பிரச்சனையில்லை
உங்கள் வேலைக்கு உண்டான செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டு அதை மட்டும் கவனத்துடன் செய்யுங்கள். அதைத் தவிர்த்து பிற வேலைகளைத் தரும் போது மறுத்துவிடுங்கள். எதற்காகவும் பொறுப்பேற்காதீர்கள் மற்றும் பிறர் உதவி கேட்கும் போது மறுத்துவிடுங்கள். விரிவாக்கப்பட்ட தந்திரமாக, கூடுதல் செயல்திட்டங்களில் பணியாற்றாதீர் மற்றும் முன்னெடுப்புகள் மற்றும் தலைமைகளில் இருந்து விலகியே இருங்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒவ்வொரு வருடமும் ' எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்தல் மதிப்பீடு '(met expectation rating) பெற்ற பணியாளரை போலப் பணியாற்ற வேண்டும்.
நாள்4 : வதந்திகளின் தலைவர்
முந்தைய நாள் உங்களிடம் பேசிய ஒருவரைப் பற்றிக் குறை கூறி உங்கள் நாளை துவங்குங்கள். சக பணியாளர்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்த இரகசியங்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பகிருங்கள். அலுவலக வதந்திகளைப் பரப்புவதில் பட்டம் பெறுவதை நோக்கமாகக் கொண்டு, எதிர்மறை கருத்துக்களைப் பரப்புங்கள். நீண்ட கால முயற்சியாக, கட்டுகதைகளைப் பரப்பிக் கவனத்தை ஈர்க்க முயலுங்கள். ஒற்றுமை இல்லாமல் இருப்பது வேலையை இழக்க தேவையான ஒன்று.
நாள்5 :ஆற்றலை பாதுகாத்தல்
'ஆற்றல் பாதுகாப்பு நாள்' போன்றவற்றில் ஈடுபட்டு, ஒன்றாகப் பணியாற்றுவதைத் தவிருங்கள். உடல்நலமில்லை என விடுமுறை எடுத்துக்கொண்டு ஊர் சுற்றுங்கள். அலுவலகத்தில் இருக்கும் போது, உறுவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசியில் பேசி நேரத்தை செலவழியுங்கள். நீண்ட கால முயற்சியாக, உங்கள் அனைத்து விடுமுறைகளையும் எடுத்து முடித்து விடுங்கள் மற்றும் அலுவலக நேரத்தில் சொந்த வேலைகளைச் செய்யுங்கள். செய்யும் வேலையை மறுபடி சரிபார்க்காதீர்கள். அதே நேரம் குறித்த நேரத்தில் வேலையை முடித்துச் சகபணியாளர்களை ஆச்சர்யப்படுத்துங்கள்.
நாள்6: பேசக்கூடாது
மெளனம் விலைமதிப்பற்றது என்பதால் நீங்கள் இன்று பேசவே கூடாது. நீங்கள் அதிகாரம் செலுத்துபவரோ அல்லது நாணமுள்ளவரோ அல்லது உங்களிடம் பேச யாருக்கும் தகுதியில்லை என்றோ நினைத்து, அனைவரையும் தவிர்த்துவிடுங்கள். நீண்ட கால நோக்கமாக,அனைத்து கலந்துரையாடலையும் தவிர்த்து விடுங்கள். தொழில்முறை வேறுபாடுகள், சக பணியாளர்களுடன் பிணைப்பு ஏற்படுத்துவதற்கு வெட்கப்படுங்கள். உங்கள் தவறுகளுக்குப் பொறுப்பேற்க கூடாது , மன்னிப்பும் கேட்கக்கூடாது. நீங்கள் செய்த வேலைக்கு வெகுமதியை எதிர்பார்க்காதீர். வேலையில் வெளிப்படுத்திக்கொள்ளாமல் இருந்தால், அது உங்களைப் பாதுகாக்காது. அதற்குப் பதிலாக வேலையை விட்டு நீக்க வைக்கும்.
நாள்7: அனைத்தையும் சொல்லிவிடுங்கள்
இந்த நாள் எதையும் மறைக்காமல் பேசுவதற்கான நாள். உங்கள் அலுவலகம் மற்றும் வேலையில் குறைகள் உள்பட அனைவரிடமும் அனைத்தையும் குறை கூறுங்கள். மனிதவள அலுவலரிடம் பேச நேரம் ஒதுக்கி, வெளியேற விதிகள் என்ன மற்றும் வெளியேறும் போது எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதைக் கேளுங்கள். நீண்ட காலப் பாதிப்பாக, அனைவரின் வேலைகளுக்கும் உரிமை கொண்டாடி, பொதுவெளியில் அவர்களின் குறைகளைக் கூறுங்கள்.
நாள்8: எதையும் காதில் வாங்கக்கூடாது
யார் சொல்வதையும் கேட்காமல் உங்கள் வேலையை எளிமையாக்குங்கள். யாராவது உங்களிடம் பேசும் போது பாதியில் வெளியேறுதல், அனைத்துத் திசைகளில் இருந்து வரும் கேள்விகள் மற்றும் அறிவுரைகளைத் தவிருங்கள். நீண்ட கால ஏற்பாடாக, வேலையில் புதியவற்றைக் கற்பதை நிறுத்துங்கள். இதை எப்போதும் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கூறி மாறுவதற்கு மறுத்துவிடுங்கள். இதைச் செய்தால் எளிதில் மாற்றத்திற்கான பாதையைக் கண்டறியலாம்.
நாள்9: சமூகவலைதளங்கள்
உங்கள் கைப்பேசியுடன் இந்த நாளில் நேரத்தை செலவிடுங்கள். வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட்டில் உங்களை முழுமையாக ஈடுபடுத்துங்கள். நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் என்ன செய்கிறீர்கள் என்பதை உலகிற்குத் தெரியப்படுத்துங்கள். குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் எப்போதும் இணையத்திலேயே உள்ளது உங்கள் நிறுவனத்திற்குத் தெரிந்துவிடும். ஏன் வீணாக உங்களை அலுவலகத்திற்கு அழைக்க வேண்டும்?
நாள்10: இருக்கவே இருக்கார் முதலாளி
இவ்வளவு செய்தும் வேலையை விட்டு நீக்கவே இல்லையா. இருக்கவே இருக்கார் முதலாளி. பொது இடத்தில் வைத்து முதலாளியை தவறாக நடத்தி, கடைசியில் அடித்தே விடுங்கள். பாதுகாப்பு அதிகாரிகள் உங்களை வெளியே அழைத்துச் செல்லும் போது உங்கள் பையை எடுக்க மறந்துவிட வேண்டாம். அவ்வளவு பெரிதாகச் செய்யவேண்டாய் என்றால், முதலாளியிடம் தனிப்பட்ட முறையில் பழகி, அதையே பயன்படுத்திச் சக ஊழியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் சரியாக நடந்துகொள்ளாமல் இருந்தால், எளிதில் வேலையை விட்டு நீக்கப்படலாம்.
மாற்று வழி..
அதேபோல் இருக்கும் வேலையை நிரந்திரமாகத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என விரும்புவோர் இந்த 10 செயல்களை ஒருபோதும் செய்துவிடாதீர்கள். இவை கண்டிப்பாக உங்கள் வேலைக்கு ஆப்பு வைத்துவிடும்.