கீமேன் காப்பீட்டுத் திட்டத்தில் நிறுவனங்களே காப்பீடு செய்து பீரிமியம் தொகையையும் அவர்களே செலுத்தும் ஒரு காப்பீட்டுத் திட்டம் ஆகும். நிறுவனத்தின் மிகமுக்கிய நபருக்கு ஆயுள் காப்பீடு செய்யப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் முழுப் பலன்களும் நிறுவனத்திற்கே செல்லும்.
இதன் நோக்கம் என்னவென்றால், நிறுவனத்தின் முக்கிய நபர் எதிர்பாராவிதமாக இறக்க நேரிட்டால், அதன் மூலம் கிடைக்கும் காப்பீட்டுத் தொகையை வைத்து நிறுவனத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.
அந்த முக்கிய நபர் நிறுவனத்தின் பங்குகளில் 51%க்கும் குறைவானவற்றையை வைத்திருக்க வேண்டும். முக்கிய நபர் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் உள்ள பங்குகள், நிறுவனத்தின் மொத்த பங்குகளில் 70%க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
அதிகபட்ச காப்பீட்டுத் தொகையானது முக்கிய நபருடைய இழப்பீட்டின் 10 மடங்கு அல்லது நிறுவனத்தின் கடந்த மூன்று ஆண்டு மொத்த லாப சராசரியின் 3 மடங்கு அல்லது கடந்த மூன்று ஆண்டுகளின் நிகரலாபத்தின் 5 மடங்கு.
இந்தக் கீமேன் காப்பீடு திட்டத்தில் நிறுவனங்களால் செலுத்தப்படும் பீரிமியம் தொகை, அந்நிறுவனத்தின் நிர்வாகச் செலவாக எடுத்துக்கொள்ளப்படும். இறப்பின் போது கிடைக்கும் காப்பீட்டுத் தொகை நிறுவனத்தின் வருமானமாகக் கணக்கிடப்பட்டு வரிவிதிக்கப்படும்.