பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8 சதவீத வட்டி.. யெஸ் வங்கி அதிரடி அறிவிப்பு..!

யெஸ் வங்கியானது தனது புதிய பிக்சட் டெபாசிட் திட்டங்களில் 18 மாதம் அல்லது அதற்குக் கூடுதலாகக் கால அளவில் முதலீடு செய்யும் போது 8 சதவீத லாபத்தினை அளிப்பதாக அறிவித்துள்ளது.

உலகச் சுற்றுச்சூழல் தினத்தன்று மும்பையினைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் யெஸ் வங்கியானது அதன் க்ரீன் மிஷன் திட்டத்தின்கீழ் 1,000 கோடி ரூபாய் வரை டெபாசிட்களைப் பெற்று அதற்கு அதிக லாபம் அளிக்க இருப்பதாக ஜூன் 5ம் தேதி தெரிவித்துள்ளது.

பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8 சதவீத வட்டி.. யெஸ் வங்கி அதிரடி அறிவிப்பு..!

யெஸ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தப் பிக்சட் டெபாசிட் திட்டத்தின் கீழ் 18 மாதங்கள் 8 நாட்கள் முதல் 15 மாதங்கள் 18 நாட்கள் வரை டெபாசிட் செய்யும் போது 7.5 சதவீத லாபத்தினை அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 8 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கப்படும். உங்கள் லாபத்தினைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

நடப்பு நிதி ஆண்டில் கிரீன் ரீடெயில் திட்டங்களாகப் பல சேவைகளை அளிக்க இருப்பதாகவும் யெஸ் வங்கி கூறியுள்ளது. அது மட்டும் இல்லாமல் சோதனை திட்டமாகத் தங்களது வங்கி செயல்பாடுகளின் மூலமாக வரும் குப்பைகளை மறுசூழற்ச்சி செய்வதன் மூலம் 9.5 டன் குப்பைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் 27.5 டன் கார்பன் கழிவுகளை ஒவ்வொரு காலாண்டும் குறைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+