இந்தியாவில் சூப்பர்மார்கெட் நிறுவனமான மோர் மெகாஸ்டோர், பிக் பஜார், வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டி அளித்து வருகிறது டிமார்ட்.
மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள இந்நிறுவனத்தின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் தற்போது 1 லட்சம் கோடி ரூபாய் என்ற சந்தை மதிப்பீட்டை அடைந்துள்ள இந்திய பங்குச்சந்தையின் எலையிட் குழுவில் சேர்ந்துள்ளது.
காலை வர்த்தகம்
இன்று காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் 1 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கின் விலை 1,608.50 கோடி ரூபாய் என்ற விலை நிலையை அடைந்துள்ளது.
இதன் வாயிலாக இன்று காலை 9.50 மணியளவில் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ்-இன் சந்தை மதிப்பீட்டு அளவு 1,00,171.80 கோடி ரூபாய் என்ற நிலையை அடைந்துள்ளது.
அதிரடி வளர்ச்சி
கடந்த 3 வாரத்தில் மட்டும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனம் சுமார் 20 சதவீதமும், 2018இல் 35 சதவீதமும், மார்ச் 2017இல் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்பு முதல் இன்று வரையில் 373.86 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
பங்கு விற்பனை
பங்குச்சந்தை கட்டுப்பாடுகளுக்கு இணங்க கடந்த வாரம் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராதாகிஷன் தமனி தனது இருப்பில் இருக்கும் பங்குளில் சுமார் 62 லட்சம் பங்குகளைப் பொதுச் சந்தையில் விற்பனை செய்தார்.
இதன் வாயிலாகவே சந்தை இந்நிறுவனப் பங்கு மதிப்பு 20 சதவீதம் வளர்ச்சி அடைந்து சந்தை மதிப்பீடு அளவு இன்று 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
வருவாய் மற்றும் லாபம்
மார்ச் காலாண்டில் டிமார்ட் கடந்த வருடத்தை விடவும் சுமார் 73 சதவீதம் அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளது, இக்காலாண்டில் டிமார் 167 கோடி ரூபாய் லாபமும், 3,810 கோடி ரூபாய் வருவாயும் பெற்றுள்ளது.
விரிவாக்கம்
2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் டிமார்ட் நிறுவனம் புதிதாக 24 சூப்பர்மார்கெட் கடைகளைத் திறந்து அசத்தியுள்ளது. டிமார்ட் துவங்கப்பட்ட காலத்தில் இருந்து இவ்வளவு பெரிய விரிவாக்கத்தைச் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வாரன் பஃபெட்..


Click it and Unblock the Notifications