பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 12,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ள வைர வியாபாரி நீரவ் மோடி, கடந்த 5 மாதங்களாகத் தலைமறைவாகவே இருந்த நிலையில் தற்போது லண்டனில் அரசியல் தஞ்சம் அடைந்துள்ளார் என் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
3வது மோசடி தொழிலதிபர்
விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் 3வது மோசடி தொழிலதிபராகத் தற்போது நீரவ் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.
பிரிட்டன் அரசு தரப்பு இதுகுறித்து எவ்விதமான தகவல்களையும் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிலையில், நீரவ் மோடியை ஏந்தொரு பத்திரிக்கையாலும் தொடர்புகொள்ள முடியவில்லை.
பஞ்சாப் நேஷனல் வங்கி
நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெஹூல் சோக்சி ஆகியோர் நாட்டின் 2வது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் 12,000 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்று அந்தப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர்.
போராட்டம்
நீரவ் மோடி, மெஹூல் சோக்சி ஆகியோர் மீது தற்போது பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் இவர்களை இந்தியாவிற்கு அழைத்து வர சிபிஐ, அமலாக்கத்துறை போராடி வரும் நிலையில் தற்போது நீரவ் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார்.
அதிர்ச்சி செய்தி
ஏற்கனவே விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு அழைத்து வர இந்திய அரசு போராடி வரும் நிலையில் தற்போது நீரவ் மோடி லண்டனில் தஞ்சம் அடைந்தது கூடுதல் அதிர்ச்சி செய்தியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications