கேஎப்சி உணவு கடையானது சிக்கன் உணவுகளுக்குப் பிரபலமான கடை என்ற நிலையில் விரைவில் சைவ பிரியர்களை ஈர்க்கும் படி 'வெஜிட்டேரியன் பிரைடு சிக்கன்' உணவை அறிமுகம் செய்ய இருக்கிறது என்று தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
இதன் மூலம் சிக்கன் போன்ற சைவ உணவு வகைகள் விரைவில் கேஎப்சி-ல் கிடைக்கும் என்றும் அதிலும் மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் எல்லாம் இருக்கும் என்றும் சிக்கன் போன்ற சுவையினை அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இரகசியம்
வெஜிட்டேரியன் பிரைடு சிக்கன் உற்பத்திக்கான பணிகள் துவக்க நிலையில் உள்ளதாகவும் அதில் என்னவெல்லாம் உபயோகப்படுத்த உள்ளோம் என்பது இரகசியமாகக் காக்கப்படும் என்றும் கேஎப்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வெஜிட்டேரியன் பிரைடு சிக்கன் எப்போது அறிமுகம் செய்யப்படும்?
2018-ம் ஆண்டு இறுதிக்குள் இந்த வெஜிட்டேரியன் பிரைடு சிக்கன் வகையினை வடிவமைத்துச் சோதனை முயற்சி செய்யப்படும் என்றும் 2019-ம் ஆண்டுச் சந்தை தேவைக்கு ஏற்றவாறு அனைத்துக் கடைகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்றும் கேஎப்சி நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் பகிர்ந்துகொண்டார்.
பிரிட்டிஷ்
பிரிட்டிஷ் அரசு அதிகக் கலோரி உள்ள உணவு வகை மீது வரியினை உயர்த்திய காரணத்தினால் கேஎப்சி நிறுவனம் மாமிசங்கள் மட்டும் இல்லாமல் சைவ உணவுகளையும் அறிமுகம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
கேஎப்சி இங்கிலாந்து அறிக்கை
கேஎப்சி இங்கிலாந்து வெளியிட்டுள்ள அறிக்கையின் படி தங்களது உணவு வகைகளில் உள்ள 20 சதவீத கலோரியினை 2024-ம் ஆண்டுக்குள் குறைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
மெக் டொனால்ட்
கேஎப்சி-ன் போட்டி நிறுவனமான மெக் டொனால்ட் 2017-ம் ஆண்டு மெக்வீகன் பர்கர் என்ற உணவை தங்களது ரெஸ்டாரண்ட்களில் அறிமுகம் செய்தது மட்டும் இல்லாமல் அதற்கு நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளது.
அதிகரித்து வரும் சைவ உணவு பிரியர்கள்
பிரட்டனில் கடந்த 6 ஆண்டுகளாக மாமிசத்திற்கு மாற்றான உணவுகள் மீதான தேவையும் அதிகரித்து வருகிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. 2012-ம் ஆண்டு 239.5 மில்லியன் டாலரினை மாமிச மாற்று உணவுகளில் பிரிட்டன் மக்கள் செலவு செய்த நிலையில் 2017-ம் ஆண்டு அது 372.1 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications