இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் பொதுத்துறை வங்கிகள் 2017-18ஆம் நிதியாண்டில் சுமார் 87,357 கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்து உள்நாட்டு முதலீட்டாளர்களும், அன்னிய முதலீட்டாளர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது.
முதல் இடம்
அதிக நஷ்டம் அடைந்த வங்கிகள் பட்டியலில் 12,283 கோடி ரூபாய் உடன் பஞ்சாப் நேஷனல் வங்கி முதல் இடத்தையும், 2வது இடத்தை ஐடிபிஐ வங்கியும் பிடித்துள்ளது.
21 பொதுத்துறை வங்கிகள்
இந்தியாவில் இருக்கும் 21 பொதுத்துறை வங்கிகளில் வெறும் 2 வங்கிகள் மட்டுமே லாபத்தைப் பெற்றுள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் இந்தியன் வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவை மட்டுமே லாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இதில் இந்தியன் வங்கி 1,258.99 கோடி ரூபாயும், விஜயா வங்கி 727.02 கோடி ரூபாயும் பெற்றுள்ளது. மீதமுள்ள 19 பொதுத்துறை வங்கிகளும் 87,357 கோடி ரூபாய் அளவிலான நஷ்டத்தைச் சந்தித்துள்ளது
பஞ்சாப் நேஷனல் வங்கி
நீரவ் மோடி மற்றும் மெஹூல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில் 2018-17ஆம் நிதியாண்டில் இவ்வங்கியின் மொத்த நஷ்டம் 12,282.82 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
2016-17ஆம் நிதியாண்டில் இவ்வங்கி 1,324.8 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐடிபிஐ வங்கி
பிஎன்பி வங்கியைத் தொடர்ந்து ஐடிபிஐ வங்கி 8,327.93 கோடி ரூபாய் நஷ்டத்துடனும் அதிக நஷ்டம் அடைந்த பொதுத்துறை வங்கிகள் பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications