வாடிக்கையாளர் எண்ணிக்கையில் இந்திய டெலிகாம் சந்தையின் தலைவனாக இருக்கும் ஏர்டெல் நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 12,000 புதிய மொபைல் டவர்களைத் தமிழ்நாட்டில் நிறுவ உள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் தற்போது பல இடங்களில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் இணைப்புப் பிரச்சனைகள் தீர்க்கப்படும் எனத் தெரிகிறது.

ஏர்டெல் திட்டம்..
ஏர்டெல் நிறுவனத்தில் தற்போது செயல்படுத்தி வரும் பிராஜெக்ட் லீப்ம் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் நெட்வொர்க் திறன் மற்றும் அதிக வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளிக்கப் போதுமான அளவிற்குத் திறனை கொண்டு வர இந்த 12,000 புதிய மொபைல் டவர்கள் பயன்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

மொபைல் சைட்
இத்திட்டத்தின் மூலம் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் மொபைல் சைட் அதாவது ஏர்டெல் சிக்னல் கிடைக்கும் தளம், இதன் எண்ணிக்கை 30 சதவீதம் வரையில் உயர்ந்து 52,000 ஆக உயர உள்ளது. இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்குப் போதுமான நெர்வொர்க் கிடைக்கும்.

பைபர் ஆப்டிக்
அதேபோல் தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனத்தின் பிராண்ட்பேன்ட் சேவையை விரிவாக்கம் செய்ய 3,000 கிலோமீட்டர் தூரத்திற்குப் புதிய பைபர் ஆப்டிக் இணைப்பை உருவாக்க உள்ளது. இதன்மூலம் ஏர்டெல்லின் பைபர் ஆப்டிக் சேவை தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 17,000 கிலோமீட்டர்க் தூரத்திற்கு அளிக்கப்பட உள்ளது.

வாடிக்கையாளர் எண்ணிக்கை
தற்போது தமிழ்நாட்டில் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை 23 மில்லியனாக உள்ளது.
தற்போது செய்யப்படும் விரிவாக்கப் பணிகள் மூலம் இதன் அளவு அடுத்தச் சில வருடங்களில் 30 மில்லியனை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.