மத்திய அரசு நட்டத்தினை அளித்து வருவது மட்டும் இல்லாமல் விற்க முடியாத அளவிற்குத் தலைவலியாக்க ஏர் இந்தியா நிறுவனம் உள்ளது. முதன் முறையாக விற்பனை செய்த முடிவு தோல்வியில் முடிந்த நிலையில் ஏர் இந்தியா விற்பனை 2.0-ல் 100 சதவீத பங்குகளையும் விற்க முடிவு செய்துள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.
100% பங்குகளை விற்க வாய்ப்பு
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நிதி அமைச்சக மூத்த அதிகாரி சுபாஷ் சந்திர கர்க் 24 சதவீத பங்குகளைத் தக்கவைத்துக்கொள்வதாக இருந்த முடிவில் இருந்து பின்வாங்க முடி செய்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 100 சதவீத ஏர் இந்தியா பங்குகளையும் விற்க வாய்ப்புகள் உள்ளது.
மறு ஆய்வு
மத்திய அரசு எடுத்த 24 சதவீத பங்குகளைத் தக்கவைத்துக்கொள்வது என்ற முடிவால் யாரும் ஏர் இந்தியா நிறுவனத்தினை வாங்க முன்வரவில்லை என்பதால் அதில் இருந்து வெளியேற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், விற்பனை திட்டம் மறு ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோல்வியில் முடிந்த விற்பனை
ஏர் இந்தியா நிறுவனம் நட்டம் அளித்து வருவதால் அதன் 76 சதவீத பங்குகளை விற்கவும், அதற்காக ஒப்பந்தங்களை அளிக்கக் கடைசித் தேதி 2018 மே 31 என்று இருந்த நிலையில் அதனை ஒருவரும் வாங்க முன்வரவில்லை.
இண்டிகோ
இண்டிகோ நிறுவனமும் முதலில் விருப்பத்தினைத் தெரிவித்து இருந்த போதிலும் சர்வதேச செயல்பாடுகளை மட்டும் தனியாக விற்க இந்திய அரசு முன்வராததால் அதுவும் தோல்வியில் முடிந்தது.
விற்க முடியாததற்கான காரணங்கள்
ஏர் இந்தியா நிறுவனத்தினை விற்க முடியாதது என்பது மிகப் பெரிய அவமானமாக மத்திய அரசுக்கு உள்ளது. விற்பனை தோல்வியில் முடிந்ததற்கு முக்கியக் காரணம் அரசு ஊழியர்களை அப்படியே பணியில் தொடர வேண்டும் என்பதும் ஏர் இந்தியா பெயரை மாற்றக்கூடாது என்பதும் ஆகும்.
கடன்
ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் தற்போது 50,000 கோடி ரூபாய் ஆக உள்ள நிலையில் அதன் 76 சதவீத பங்குகளை விற்று 34,000 கோடி ரூபாய் கடனை அடைக்க மத்திய அரசு முடிவு செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications