இந்திய மென்பொருள் ஏற்றுமதி சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் இன்போசிஸில் கடந்த சில வருடங்களாகவே பல உயர் அதிகாரிகள் வெளியேறி வருகின்றனர். இந்த மோசமான சூழ்நிலை நந்தன் நீலகேனி வந்த பின்று மாறியது.
இந்நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓவாகச் சலில் பாரிக் பதவியேற்றி சில மாதங்களே ஆன நிலையில் இந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாக அதிகாரிகளான சங்கீதா சிங், நிதிஷ் பங்கா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
சங்கீதா சிங்
இன்போசிஸ் நிறுவனத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான ஹெல்த்கேர் மற்றும் லைப் சையின்ஸ் பிரிவின் தலைவர் மற்றும் துணை நிர்வாகத் தலைவர் சங்கீதா சிங் இந்நிறுவனத்தில் சேர்ந்து 2 வருடங்கள் கூட முழுமையாக முடியாத நிலையில் தற்போது இன்போசிஸை விட்டு வெளியேற முடிவு செய்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விப்ரோவில் இருந்து இன்போசிஸ்
இந்திய ஐடி சந்தையில் பணிபுரியும் மூத்த பெண் அதிகாரிகளில் சங்கீதா சிங் ஒருவர். இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான விப்ரோ-வில் இருந்து சேர்க்கப்பட்டார்.
800 மில்லியன் டாலர்
சங்கீதா சிங் தலைமை வகிக்கும் ஹெல்த்கேர் மற்றும் லைப் சையின்ஸ் பிரிவின் மொத்த வர்த்தகம் 800 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் அளவீட்டில் இப்பிரிவு முக்கியமான பங்கை விகிக்கிறது.
நிதிஷ் பங்கா
அதேபோல் இன்போசிஸ் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் எட்ஜ் பிராடெக் பிரிவின் உயர் துணை தலைவர் மற்றும் குளோபல் ஹெட் ஆக இருக்கும் நிதிஷ் பங்கா-வும் தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.
குளோபல் லாஜிக்
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய நிதிஷ் பங்கா தற்போது குளோபல் லாஜிக் என்னும் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இணைந்துள்ளார்.
பிற உயர் அதிகாரிகள்
சங்கித சிங் மற்றும் நிதிஷ் பங்கா ஆகியோரை தாண்டி இன்போசிஸ் நிறுவனத்தில் சலில் பாரிக் வந்த பின்பு பல உயர் அதிகாரிகள் வெளியேறியுள்ளனர்.
டெக்னாலஜி பிரிவின் தலைவர் - நவின் புத்திராஜா
டிசைன் பிரிவின் தலைவர் - ராஜகோபாலன்
பெரிய டீல்களைக் கையாளும் துணை நிர்வாகத் தலைவர் - ரித்திகா சூரி
பிக் டேட்டா மற்றும் அனலிட்டிக்ஸ் பிரிவின் தலைவர் - அப்துல் ரசாக்
ஆகியோர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
என்ன காரணம்..?
சமீப காலமாக இன்போசிஸ் நிறுவனத்தில் தொடர் நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது உண்மையிலேயே நிர்வாகத்தோடு நேரடியாகப் பணியாற்றும் அனைவருக்கும் கடினமான ஒன்று.
இதன் காரணமாகத் தற்போது பல உயர் அதிகாரிகள் தொடர்ந்து இந்நிறுவனத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
தடுமாற்றம்..
உயர் அதிகாரிகள் பலரும் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறிய நிலையில், காலி இடத்தை அடுத்த மூத்த அதிகாரிகள் வைத்து நிரப்பினாலும் நிர்வாகத்தில் கண்டிப்பாகத் தடுமாற்றம் ஏற்படும். இதைச் சலில் பாரிக் தலைமையிலான இன்போசிஸ் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே தற்போதைய பிரச்சனை.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications