அனில் அகர்வாலுக்கு அடுத்த அடி.. ஒடிசா மக்கள் ரத்தம் சிந்த தயார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தூத்துக்குடியில் இருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மக்களின் கடும் போராட்டம் மற்றும் 13 பேரின் உயிர் தியாகத்தின் வாயிலாக ஆலை மூடப்பட்ட நிலையில், தற்போது வேதாந்தா நிறுவனத்தின் கிழக்கு ஒடிஷாவில் இருக்கும் அலுமினியம் உருக்காலையை மூட வேண்டும் என இப்பகுதியில் இருக்கும் பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 1000 மையில்

1000 மையில்

13 பேரின் உயிர் தியாகத்தின் மூலம் உயிர்கொல்லும் ஸ்டெர்லைட் ஆலையை மூட முழுக் காரணமாகத் துத்துக்குடி மக்களின் வெற்றியும், நம்பிக்கையும் தற்போது 1000 மையில் தொலைவில் உள்ள ஒடிஷா மக்களுக்குக் கேட்டுள்ளது.

இங்கு வேதாந்தா ரிசோர்ஸ் நிறுவனத்தின் அலுமினியம் உருக்கலை உள்ளது, இதை மூட வேண்டும் என்று இப்பகுதியில் பல தலைமுறையாக வாழ்ந்து வரும் பழங்குடியினர் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர்.

 

பாக்சைட் சுரங்கம்

பாக்சைட் சுரங்கம்

பல வருடங்களாகக் கிழக்கு ஒடிஷாவில் உள்ள பசுமை, காட்டுப் பகுதியில் அமைந்துள்ள நியாம்கிரி மலைப் பகுதியில் இருக்கும் பாக்சைட் சுரங்கத்திற்கு எதிராகப் பழங்குடியினர் போராடி வருகின்றனர்.

 ரத்தம் சிந்த தயார்..

ரத்தம் சிந்த தயார்..

மேலும் பழங்குடி மக்களின் தலைவர் லாடோ சிகாகா கூறுகையில், "நியாம்கிரி-க்கா ரத்தம் சிந்தவும் தயார், உயிரை விடவும் தயார் எனக் கோடாரியை தோளில் சுமந்தபடி கூறியுள்ளார். இதே மன நிலையில் தான் இப்பகுதியில் இருக்கும் மக்களும் உள்ளனர்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

வேதாந்தா எங்களில் சிலருக்கு தான் வேலைவாய்ப்பை அளிக்க முடியும், ஆனால் இந்த நியாம்கிரி மலை எங்கள் எல்லோருக்கும் எல்லாமும் கொடுத்துள்ளது. இது எங்கள் நியாம்கிரி ராஜா, இந்த மலையை அவர்கள் கடவுளாக வணங்குகிறார்கள்.

ஜூன் 5ஆம் தேதி பழங்குடி மக்கள் அலுமினியம் உருக்காலையை நோக்கி நடந்து போராட்டம் நடத்தினர்.

 

 பேனர்

பேனர்

மேலும் இந்தப் போராட்டத்தில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. இதில் சுற்றுச்சூழலையும், மனிதர்களையும் கொல்லும் வேதாந்தா இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். இது தூத்துக்குடி வீரர்களுக்குச் சமர்ப்பணம் என எழுதி இருந்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Next blow on Anil Agarwal's vedanta resources

Next blow on Anil Agarwal's vedanta resources
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X