இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மாதம் வரலாறு காணாத விலை உயர்வினை அடைந்த பிறகு மே 29 முதல் தொடர்ந்து 14 நாட்களாகக் குறைக்கப்பட்டு வந்த நிலையில் புதன்கிழமை விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இன்றைய பெட்ரோல் விலை நிலவரம்
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 79.33 ரூபாய் என்றும், டெல்லியில் 76.43 ரூபாய் என்றும், மும்பையில் 84.26 ரூபாய் என்றும் கொல்கத்தாவில் 79.10 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய டீசல் விலை நிலவரம்
பெட்ரோல் விலை போன்றே டீசல் விலையிலும் எந்த மாற்றமும் இன்று இல்லை. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் 71.62 ரூபாய் என்றும், டெல்லியில் 67.85 ரூபாய் என்றும், கொல்கத்தாவில் 70.40 ரூபாய் என்றும், மும்பையில் 72.24 ரூபாய் என்றும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விலை குறைந்ததற்கான காரணம்
கடந்த 14 நாட்களாகப் பெட்ரோல், டீசல் விலை குறைந்ததற்குச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததே காரணம் ஆகும். சென்ற மாதம் வரை பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததற்கு மோடி அரசு மீது மக்களுக்கு வெறுப்பு அதிகமானதால் நீண்ட கால மற்றும் குறைந்த காலத் தீர்வுகள் குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பாஜக
பாஜக அமைச்சர்களான தேவேந்திர ஃபாண்ட்விஸ், நிதின் கட்காரி மற்றும் எண்ணெய் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பெட்ரோலிய பொருட்களைச் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி கீழ் கொண்டு வர தங்களது குரல்களை எழுப்பியுள்ளனர்.
பெட்ரோலிய பொருட்கள்
பெட்ரோலிய பொருட்கள் விலை 2010-ம் ஆண்டு முதல் ஒழுங்கற்ற முறையில் மாறி வரும் நிலையில் 2017 ஜூன் 16 முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினமும் விலையினை மாற்றி அமைத்து வருகின்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 0.58 புள்ளிகள் என 0.76 சதவீதம் சரிந்து 75.88 டாலர்கள் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே நேரம் WTI கச்சா எண்ணெய் 0.26 புள்ளிகள் என 0.39 சதவீதம் உயர்ந்து 66.36 டாலர் ஒரு பேரல் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications