இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் மார்ச் மாதத்திற்கான நிதி அறிக்கையினை வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் 6,218 கோடி ரூபாய் என்றும் இது வோடாஃபோன் நிறுவனத்தினை விட 22% அதிகம் என்பதும் ஏர்டெல் நிறுவனத்தின் 8,087 கோடி ரூபாயினை விட 12 சதவீதம் குறைவு என்றும் தெரியவந்துள்ளது.
இரண்டு வருடங்கள்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சேவை துவங்கப்பட்டு இரண்டு வருடங்கள் முடிவதற்குள் 25.6 சதவீத சந்தையினைப் பிடித்துள்ளது. இதுவே வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனத்தின் மொத்த வருவாய் சதவீதம் என்பது 21 மற்றும் 16.6 சதவீதங்களாக உள்ளது.
ஏஜிஆர்
சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய்(ஏஜிஆர்) தரவானது சந்தை பங்குகளின் அசல் மதிப்பினை காட்டிலும் கொஞ்சம் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும். ஆனால் ஒவ்வொரு சந்தாதார்கள் மூலமாக எவ்வளவு வருவாய் என்ற விவரங்களை வெளியிடவில்லை.
முதல் காலாண்டு அறிக்கை
2018-2019 நிதி ஆண்டின் முதல் காலாண்டு அறிக்கையினை ஜியோ வெளியிடும் போது வோடாபோன் மற்றும் ஐடியா நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தினைப் பிடித்து இருப்பதாக அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
ஜியோ
ஜியோ நிறுவனம் 2016 செப்டம்பர் மாதம் தனது வணிக ரீதியான டெலிகாம் சேவையினைத் துவங்கிய நிலையில் இலவசங்கள் வாரி வழங்கி வேகமாக 5-ம் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற இடத்தினைப் பிடித்தது. அதே நேரம் ஆர்காம் நிறுவனம் மூடப்பட்டது, ஏர்செல் நிறுவனம் திவால் ஆனது போன்ற காரணங்களால் 4-ம் இடத்தில் இடத்தில் இருந்து ஜியோ தற்போது இரண்டாம் இடத்தினைப் பிடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications